TRELER லாரியை மோதிய கார்! ஆடவர் பலி! இருவர் காயம்!

- Sangeetha K Loganathan
- 25 Jun, 2025
ஜூன் 25,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிர்திசையில் வந்த TRELER லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் 51 வயதான வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் TRELER லாரி கவிழ்ந்ததில் 44 வயது லாரி ஓட்டுநரும் மற்றொரு வாகனமோட்டியும் காயமடைந்ததாக Port Dickson மாவாட்டக் காவல் ஆணையர் Maslan Udin தெரிவித்தார். மாலை 3.30 மணியளவில் லுக்குட்டிலிருந்து செப்பாங் நோக்கிச் செல்லும் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் லாரியிலிருந்த எரிவாயு சிலிண்டர்கள் சாலையில் கவிழ்ந்ததால் கடுமையானப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக Port Dickson மாவாட்டக் காவல் ஆணையர் Maslan Udin தெரிவித்தார்.
விபத்தில் பலியான 51 வயது Proton Wira வாகனமோட்டி Proton Saga வாகனத்தை முந்தும் போது எதிரில் வந்த TRELER லாரியை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 வாகனங்கள் சம்மந்தப்பட்ட இந்த விபத்தில் ஒருவர் பலியானதாகவும் உயிரிழந்த 51 வயது Proton Wira வாகனமோட்டியின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக Port Dickson மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் Port Dickson மாவாட்டக் காவல் ஆணையர் Maslan Udin தெரிவித்தார்.
Sebuah kereta hilang kawalan lalu merempuh treler di Port Dickson menyebabkan pemandunya berusia 51 tahun maut di tempat kejadian. Dua lagi cedera termasuk pemandu treler. Kemalangan turut menyebabkan kesesakan akibat silinder gas terjatuh di jalan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *