விரிவான மேம்பாட்டு உருமாற்றத்திற்கு கோலாலம்பூர் மாநகரம் உட்படுத்தப்படும்!

- Muthu Kumar
- 25 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 25-
2040ஆம் ஆண்டுக்குள் கோலாலம்பூர் மாநகரம் மிகவும் விரிவான ஒரு பெரிய அளவிலான மேம்பாட்டு உருமாற்றத்திற்கு உட்படுத்தப்படும்.நகரவாசிகளின் வசதியை உறுதி செய்வதற்காக, இன்றைய புதிய தொழில்நுட்பங்களான இலக்கவியல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஏஐ ஆகியவற்றையும் உட்படுத்தி புதிய திட்டம் இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
“எனவே, இந்த மனிதாபிமானக் கொள்கையில், இலக்கவியல், ஏ.ஐ மற்றும் பள்ளிகள், மக்களுக்கான வீடமைப்பு மேம்பாடு, சிறு வணிகர்களின் வசதி போன்ற புதிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு மேலும் உள்ளடக்கியதாக நாங்கள் உறுதிசெய்வோம். ஏனெனில், எங்கள் அணுகுமுறை மாநகர மன்றத்தின் பெரும்பான்மையான மக்களின் (தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் பி40, எம்40ஆக உள்ளனர், என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.
நேற்று, 2040ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் உள்ளூர் திட்ட வெளியீட்டு விழாவில் டத்தோ ஸ்ரீ அன்வார் உரையாற்றினார்.புதிய வளர்ச்சி இன்னும் பழைய கட்டமைப்பால் கட்டுப்படுத்தப்படுவதால் இதை மாற்றுவது மிகவும் கடினம் என்றும் அவர் கூறினார். எனினும், கோலாலம்பூரில் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்தினரும் வாழ்க்கையை மிகவும் சீரான முறையில் குறிப்பிட்ட தரப்பைப் புறக்கணிக்காமல் அனுபவிப்பதற்காக, அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் இன்னும் மடானி கொள்கையைக் கருத்தில் கொண்டுள்ளன.
Kuala Lumpur akan melalui transformasi besar menjelang 2040 dengan tumpuan pada digitalisasi, AI, perumahan rakyat dan kemudahan peniaga kecil. PM Anwar tekankan pembangunan inklusif demi kesejahteraan B40 dan M40 sejajar dasar MADANI.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *