விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவிலா?

top-news
FREE WEBSITE AD

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

லியோ படத்தை தொடர்ந்து, இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தின் விஎப்எக்ஸ் பணிகளுக்காக விஜய் 2 தினங்களுக்கு முன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

வெங்கட்பிரபு படத்தை தொடர்ந்து, அடுத்து தனது 69வது படத்தில் நடிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை எச். வினோத் இயக்குகிறார். இந்த படத்துடன் தன் திரையுலக பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் அடுத்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக முழுநேர அரசியல்வாதியாக கட்சி பணிகளில் ஈடுபட உள்ளார்.

கடந்த ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் வெளியானது. விஜய், திரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் பெரிய அளவில் வசூலில் சாதனை புரிந்தது. ஆனாலும் விமர்சன ரீதியாக இந்த படம் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது.

இந்த படத்தின் இசை வௌியீட்டு விழாவை, சென்னை இண்டோர் ஸ்டேடியத்தில் நடத்த படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார், லோகேஷ் கனகராஜ், விஜய் ஆகியோர் திட்டமிட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பாதுகாப்பு கருதி இந்த விழாவை நடத்த அனுமதிக்க முடியாது என, சென்னை மாநகர போலீசார் மறுத்து விட்டனர்.

இந்நிலையில், தற்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், டைரக்டர் வெங்கட்பிரபு, நடிகர் விஜய் முடிவு செய்துள்ளனர். இதற்கு வேறு சில காரணங்கள் சொல்லப்பட்டாலும்.உண்மையான காரணம், புதிய அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய்க்கு எதிராக, திமுக அரசு வலை வீசும். இந்த இசை வெளியீட்டு விழாவை முடக்கும், அனுமதி தராமல் ரத்து செய்ய வைக்கும் என்பதுதான்.

அதனால், இசை வெளியீட்டு விழாவை, சென்னையில் நடத்தாமல் மலேசியாவுக்கு இடம் மாற்றி விட்டனர். ஆனால், இது தமிழகத்தில் உள்ள விஜய் ரசிகர்களை பெரிய ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது. அதே நேரத்தில், இந்த சாதாரண விஷயத்துக்கே அரண்டு போய் மலேசியாவில் விழா நடத்த முடிவு செய்த விஜய், ஆளுங்கட்சியை எதிர்த்து, அரசியல் செய்து தமிழ்நாட்டுக்கு சிஎம் ஆவதெல்லாம் சாத்தியமா? 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *