புக்கிட் கிளேடேக் தமிழ்ப்பள்ளியின் 33ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி!

- Muthu Kumar
- 30 Jun, 2025
(வீ.இராஜேந்திரன்)
கெமெஞ்சே, ஜூன் 30-
அண்மையில் புக்கிட் கிளேடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 33 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி பள்ளி திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இல்ல அணிவகுப்பு. இறைவாழ்த்து, தேசிய கீத பாடலுக்கு பிறகு பள்ளி தலைமையாசிரியர் தி.கோபிநாத் வரவேற்புரையாற்றினார்.தொடர்ந்து இவ்விளையாட்டுப் போட்டியை ரெப்பா சட்டமன்றம் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.வீரப்பன் அவர்களின் சிறப்பு அதிகாரி முரளி தங்கையா தீபந்தம் ஏற்றி தொடக்கி வைத்து உரையாற்றினார்.
அவர் தமது உரையில் மாநில அரசாங்கத்தின் நலத் திட்டங்களை வருகையாளர்களிடம் எடுத்துரைத்தார்.தொடர்ந்து விளையாட்டுப் போட்டிக்கு வெள்ளி 1500 வழங்குவதாக வாக்குறுதியளித்தார். விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது.நேர் ஓட்டம்,அஞ்சல் ஓட்டம்.குழு போட்டிகள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.
போட்டியின் இறுதியில் அதிக புள்ளிகளை பெற்ற சிவப்பு இல்லம் முதல்நிலையில் வெற்றி பெற்றது.இவ்விளையாட்டுப் போட்டிக்கு மேலும் சிறப்புச் சேர்க்க பள்ளி பெ.ஆ.சங்கத் தலைவர் நளினி. துணைத் தலைவர் சந்திர மோகன், ஆசிரியர்கள்.
பெற்றோர்கள், மாணவர்கள், நன்கொடையாளர்கள் கலந்து கொண்டார்கள்.
Sukan tahunan ke-33 SJKT Bukit Kelatek berlangsung meriah dengan pelbagai acara. Murali Thangayah merasmikan acara dan umum sumbangan RM1,500. Rumah Merah muncul juara. Guru, ibu bapa dan bekas pelajar turut hadir memeriahkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *