ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று மறு வெளியீடு காணும் ஆட்டோகிராப் ஏ ஐ ட்ரெய்லர்!

top-news
FREE WEBSITE AD

சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு நடிகரும் இயக்குநருமான சேரனின் ஆட்டோகிராஃப் படம் ரீ ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் ஏஐ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.

கடந்த 2004-ம் ஆண்டு இயக்குநர் சேரன் எழுதி இயக்கிய படம் ஆட்டோர்கிராஃப். இந்தப் படத்தில் அவரே நாயகனாகவும் நடித்தார். இவருடன் இணைந்து நடிகைகள் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு, கிருஷ்ணா, பெஞ்சமின், பாண்டி, ராஜேஸ், விஜயா சிங் என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.

படம் வெளியான போது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது போல படத்தில் வரும் பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் நம்பிக்கையும் பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

ஒரு இளைஞர் தனது வாழ்க்கையில் தான் சிறு வயதில் இருந்து கடந்து வந்த பாதையை மீண்டும் ஒரு முறை திருப்பி பார்த்து நினைவுகளை அசைப்போடுவதே ஆட்டோகிராஃப் படத்தின் கதை ஆகும். இதில் தான் பள்ளியில் சேரும் போது முதல் கல்லூரி முடித்து வேலைக்கு செல்லும் வரை தனது வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள், காதல்கள் என அனைத்தும் காட்டப்பட்டிருக்கும்.

இந்தப் படத்தில் முன்னாள் காதல்களையும், ஆண் மற்றும் பெண் இடையேயான புனிதமான நட்பையும் மிகவும் அழகாக சேரன் காட்டியிருப்பார். இதில் நடிகைகள் கோபிகா மற்றும் மல்லிகா இருவரும் சேரனின் முன்னாள் காதலிகளாக நடித்திருப்பார்கள். நடிகை சினேகா சேரனின் உயிர் தோழியாக நடித்திருப்பார். முன்னாள் காதலிகளை சந்திக்கும் போதும், தனது தோழியுடன் பழகும் போது மிகவும் அழகாகவும், கண்ணியமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.2004-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஆட்டோகிராஃப் படத்தை தற்போது ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் காரணமாக இந்தப் படத்தின் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ட்ரெய்லரை கோலிவுட் சினிமாவில் உள்ள முக்கிய நட்சத்திரங்கள் நேற்று வெளியிட்டனர். அது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *