பெர்சத்து, பாஸ் கட்டுப்பாட்டில் உள்ள தொகுதிகளை தேமு கைப்பற்றும்!

- Muthu Kumar
- 06 Jul, 2025
பத்து பஹாட், ஜூலை 6-
தற்போது பெர்சத்து, பாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சில நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை, அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் கைப்பற்ற தேசிய முன்னணி இலக்கு கொண்டுள்ளது.
தேசிய முன்னணி, குறிப்பாக அம்னோ மீண்டும் வெல்வதற்கான சாத்தியமிக்க தொகுதிகளை அடையாளம் காண்பதற்கான பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளும் கண்ணோட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
"பெர்சத்து, பாஸ் வெற்றி கொண்ட தொகுதிகளை நாங்கள் கன்காணித்து வருகிறோம். அத்தொகுதிகளில் நாங்கள் கடினமாக உழைத்து நம்பிக்கையுடன் செயல்படுவோம். அடுத்த பொதுத் தேர்தலில் அத்தொகுதிகளை அம்னோ வேட்பாளர்கள் மீண்டும் வெல்வார்கள்", என்றார் அவர்.
நேற்று, ஜொகூர் ஸ்ரீ காடிங் அம்னோ தொகுதி பேராளர்கள் கூட்டத்தை நிறைவு செய்து வைத்து பேசும்போது டாக்டர் அஹ்மட் ஸாஹிட் அவ்வாறு கூறினார். மேலும், எதிர்க்கட்சிகள் கூறும் கதைகளை நம்பி கட்சி உறுப்பினர்கள் யாரும் குழம்ப வேண்டாம் என்றும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அஹ்மட் ஸாஹிட் கேட்டுக் கொண்டார்.
Barisan Nasional, khususnya UMNO, berazam merampas semula kerusi Parlimen dan DUN yang kini dikuasai Perikatan Nasional dalam pilihan raya akan datang. Ahmad Zahid Hamidi yakin melalui usaha gigih dan strategi berfokus, UMNO mampu menang kembali kerusi tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *