சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளுக்கு செயற்குழு : மந்திரி பெசார் ஒப்புதல் அங்கீகாரம் வழங்கியுள்ளது!

- Muthu Kumar
- 06 Jul, 2025
(டிகே.மூர்த்தி)
கோல சிலாங்கூர், ஜூலை 6-
சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளிகள் மற்றும் மாணாக்கர்களின் தொடர் வளர்ச்சிக்கு புதிதாக சிறப்பு செயற்குழு செயல்பட மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அங்கீகாரம் வழங்கியுள்ளது பாராட்டுக்குரியதாகும்.
இந்த சிறப்பு செயற்குழுவுக்கு தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி வாரியக்குழுத் தலைவரும், முன்னாள் ராணுவ வீரருமான அன்பழகன் ஆறுமுகம் கூறுகையில், மாநிலத்தில் அமைந்துள்ள மொத்தம் 99 தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒற்றுமை அரசாங்கம் வழங்கியுள்ள அங்கீகாரத்தை ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
பேரா மாநில ஒற்றுமை அரசாங்கத்தில், இந்திய சமூகத்தினரும் பின்தங்கி விடக்கூடாது என்னும் சிறந்த நோக்கத்துடன் இந்திய சமூக நல விவகாரம் என்ற பிரிவை ஆட்சிக்குழுவில் இடம் பெறச் செய்துள்ளார் அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சரானி முகமது.
அதற்கான தலைமைப் பொறுப்பினை ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசனிடம் வழங்கப்பட்டது. அதன் மூலம் தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் மற்றும் அரசாங்க நில விவகாரங்களுக்கு தீர்வு காணப்படும் செய்திகளை தமிழ் மலரில் தினசரி பார்க்கின்றோம். அது போன்று வாய்ப்பு சிலாங்கூர் இந்திய சமூகத்திற்கு மாநில மந்திரி பெசார் அமிருடின் வழங்கினால், ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதில் இடம் பிடிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் நான் கருதுகிறேன்.
மேலும், சிலாங்கூரில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் (2025) ஏறக்குறைய மொத்தம் 2,300 ஆசிரியர்கள் பணி செய்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை என்பது 26,506 ஆக உள்ளது. முதலாம் ஆண்டு வகுப்பில் மட்டும் 3,500 மாணவர்கள் கல்விக் கற்கின்றனர் என்று அன்பழகன் குறிப்பிட்டார்.
Menteri Besar Selangor, Datuk Seri Amirudin Shari meluluskan penubuhan jawatankuasa khas untuk pembangunan sekolah Tamil. Anbalagan Arumugam dilantik sebagai pengerusi. Langkah ini dianggap anugerah besar untuk 99 sekolah Tamil di Selangor yang memiliki 2,300 guru dan 26,506 murid.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *