இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு தந்தையானார் கவிஞர் சினேகன்!

top-news
FREE WEBSITE AD

கவிஞர் சினேகன் மற்றும் கனிகா தம்பதியினர் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி இருக்கிறார்கள்.விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசன் மூலம் தான் சினேகன் மக்களிடையே நல்ல பரிச்சயமானார்.


அதன் பின்பு தான் சினேகன் இந்த பாடல்கள் எல்லாம் எழுதி இருக்கிறாரா என எல்லோரும் வியப்புடன் பார்த்தது.சினேகனை மக்களிடையே இன்னும் கொண்டு சேர்த்த பெருமை அவருடைய மனைவி கனிகா சினேகனுக்கு தான் சேரும்.

நிறைய பாடல்களை சினேகன் தான் எழுதியது என வெளியே உலகத்திற்கு கொண்டு வந்தது கனிகா தான்.சினேகன் மற்றும் கனிகா பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

நான்கு வருட திருமண வாழ்க்கையில் கடந்த வருடம் கனிகா கர்ப்பமாக இருப்பதை இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்கள்.இந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு கடந்த ஜனவரி 25ஆம் தேதி அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறது.

இந்த விஷயத்தை சினேகன் தாயே என் மகளாகவும், மகளே என் தாயாகவும் இரட்டைப் பெண் குழந்தைகளை தன்னுடைய மனைவி பெற்றெடுத்து இருப்பதாக பகிர்ந்து இருக்கிறார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *