கார் தீப்பிடித்ததில் 11 வெளிநாட்டு ஆண்கள் மூச்சுத் திணறலால் பாதிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 19:

ரியானா கிரீன் ஈஸ்ட் காண்டோமினியத்தின் அடித்தளத்தில் இன்று ஒரு கார் தீப்பிடித்ததில் 11 வெளிநாட்டு ஆண்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்.காலை 9.45 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு அதிகாரி நசாருதீன் ஹரோன் தெரிவித்தார்.

இதனை அடுத்து, வாங்சா மஜு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழு அங்கு விரைந்ததாக அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட வாகனத்தின் எந்திர பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், வாகனத்தின் சுமார் 30 விழுக்காட்டை தீ சேதப்படுத்தியதாகவும், அடித்தளத்தை புகையால் நிரப்பியதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஆறு பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Sebuah kereta terbakar di tingkat bawah Kondominium Riana Green East menyebabkan 11 lelaki warga asing sesak nafas. Kebakaran berpunca dari enjin kereta dan memusnahkan 30% kenderaan. Enam mangsa dihantar ke hospital. Siasatan masih dijalankan.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *