132 வெளிநாட்டுக் கைதிகள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!

- Sangeetha K Loganathan
- 19 Jun, 2025
ஜூன் 19,
சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்ததற்காகக் கைது செய்யப்பட்ட 132 வெளிநாட்டினர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 112 இந்தோனேசியர்கள் 13 பாக்கிஸ்தானியர்கள், 5 நேப்பாள நாட்டினர்கள் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் என அனைத்துலக விமான நிலையத்தின் மூலமாக அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
திருப்பி அனுப்பப்பட்ட 132 வெளிநாட்டினர்களின் குற்றப் பின்னணிகள் விசாரிக்கப்பட்டு சிறை தண்டனைக்குப் பின்னர் அவர்களின் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீண்டும் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. அவர்களின் பயணச் செலவுகள் முழுக்க சம்மந்தப்பட்ட நாட்டின் வெளியுறவுத் துறையால் மேற்கொள்ளப்பட்டதாகவும் சிறையிலிருக்கும் வெளிநாட்டினர்களையும் விரைந்து அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
Seramai 132 warga asing termasuk dari Indonesia, Pakistan, Nepal dan Yaman dihantar pulang selepas tamat hukuman penjara kerana tinggal secara haram di Malaysia. Kos penghantaran ditanggung negara asal dan larangan masuk semula telah dikenakan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *