KLIA 200 கோடி வரி ஏய்ப்பு! கஸ்டம்ஸ் அதிகாரிகளின் மெகா ஊழல்!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர்‌ அனைத்துலக விமான நிலையத்தில்‌ மதுபானம்‌, சிகரெட்‌ கடத்தலில்‌ இருநூறு கோடி வெள்ளி வரி ஏய்ப்பு நடந்திருப்பதை மலேசிய லஞ்ச ஊழல்‌ ஒழிப்பு ஆணையமான MACC கண்டுபிடித்துள்ளது.

 அந்த விமான நிலையத்தில்‌ கடந்த இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான சோதனை நடவடிக்கைகளில்‌ இது அம்பலமானது.ஒப் சம்பா2.0’ எனும்  பெயரில் நடத்தப்பட்ட இச்சோதனையில்‌ அரச மலேசிய சுங்கத்துறையின்‌. பல்வேறு நிலைகளைச்‌ சேர்ந்த முப்பத்து நான்கு அதிகாரிகள்‌ கைது செய்யப்பட்டனர்‌.

மார்ச்‌ 11ஆம்‌ தேதிக்கும்‌ 25ஆம்‌ தேதிக்கும்‌ இடையில்‌ மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில்‌ தனிநபர்கள்‌, நிறுவன உரிமையாளர்கள்‌ என இதர இருபத்தேழு பேரும்‌ தடுத்து வைக்கப்பட்டனர்‌.  எம்‌ஏசிசியின்‌ கள்ளப்பணப்‌ பரிமாற்ற ஒழிப்புத்துறையின்‌ (ஏஎம்‌எல்‌) தலைமையில்‌ வருமானவரித்துறை, பேங்க்‌ நெகாரா மலேசியா ஆகியவற்றின்‌ ஒத்துழைப்போடு மார்ச்‌ 11ஆம்‌ தேதியன்று அச்சோதனை நடவடிக்கை தொடங்கப்பட்டது.  தேசிய வருமானத்திற்குப்‌ பெரிய அளவில்‌ பண: இழப்பு ஏற்பட்டிருப்பது இதன்‌ மூலம்‌ தெரிய வந்துள்ளது.

இதனை நாம்‌ கண்டுகொள்ளாமல்‌ இருந்தால்‌, நமது பொருளாதாரத்திற்கு கடுமையான எதிர்மறை விளைவுகளை அது ஏற்படுத்தியிருக்கும்‌ என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில்‌ எம்‌.ஏசிசி குறிப்பிட்டுள்ளது.

கைது நடவடிக்கையைத்‌ தொடர்ந்து, கடத்தல்‌ கும்பலைச்‌ சேர்ந்தவர்களின்‌ கைப்பேசிகள்‌, மடிக்கணினிகள்‌, எட்டு சொகுசு வாகனங்கள்‌. போன்றவையும்‌ கைப்பற்றப்பட்டன.

தனிநபர்கள்‌, நிறுவனங்கள்‌, இடைத்தரகர்கள்‌ போன்ற தரப்பினருக்குச்‌ சொந்தமான 231 வங்கிக்‌ கணக்குகளும் முடக்கப்பட்டன. அந்தக் கணக்குகளில்‌ மொத்தம்‌ ஒரு கோடியே எண்பது லட்சம்‌ வெள்ளி. வரவு வைக்கப்பட்டிருந்தது.

இதுவரை இரண்டு சுங்கத்துறை அதிகாரிகள்‌ மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்‌, 23 சுங்கத்துறை அதிகாரிகள்‌ மீது வரும்‌ ஜூன்‌ மாதம்‌ ஆறாம்‌ தேதிக்குள்‌ நாடு முழுமையும்‌ உள்ள செஷன்ஸ்‌ நீதிமன்றங்களில்‌ குற்றம்‌ சுமத்தப்படும்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *