ADGMIN 2025 மலேசியா இலக்கவியல் தொடர்பான உறவுகளை வலுப்படுத்தும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன. 17-

ADGMIN 2025 மலேசியா இலக்கவியல் தொடர்பான உறவுகளை வலுப்படுத்தும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் திட்டவட்டமாகக் கூறினார். செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, இலக்கவியல் புத்தாக்கம் ஆகிய முக்கிய கூறுகளுக்கு கவனம் செலுத்தப்படும்.

ஆசியான் இலக்கவியல் அமைச்சர்களுக்கிடையிலான முக்கியச் சந்திப்புக் கூட்டத்தில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்துகொள்கிறார். பேங்காக்கில், தாய்லாந்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, இலக்கவியல் நிர்வாகம், நாடுகளுக்கிடையிலான எல்லை கடந்த தரவு பகிர்வு பாதுகாப்பு திட்ட வரைவு இலக்கவியல் வாணிகம், இலக்கவியல் பொருளாதரம் என முக்கிய அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படுகிறது.




'பாதுகாப்பான புத்தாக்கம், ஆசியானின் இலக்கவியல் துறை வெற்றியை உறுதிசெய்யும்' என்ற கருப்பொருளில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இலக்கவியல் வணிகத்தில், மலேசியா ஆசியான் நாடுகளின் முன்னோடியாகத் திகழ, இந்தக் கூட்டம் வழிவகுக்கும்.ஆசியானின் டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்தவும், செயற்கை நுண்ணறிவு துறையில், வருங்காலங்களில் நாடு தயாராவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கும் இந்த சந்திப்பு முக்கியமானது, "என்று கோபிந்த்சிங் கூறினார்,

சைபர் பாதுகாப்பு, ஏஐ பாதுகாப்பு மற்றும் தரவு மைய உள்கட்டமைப்பு பற்றிய விவாதங்களை நடத்துவதில் மலேசியாவின் பங்கு விளக்கப்பட்டது.




மலேசியா நுண்ணோக்கும் 5 முக்கிய அம்சங்கள்:

1. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகள் நிர்வாகம் ஏஐ மற்றும் பெரிய தரவுகளின் மேம்பட்ட நிர்வாகம், ஆராய்ச்சி மற்றும் பயன்பாடுகள்.

2. இணைய தரவு பாதுகாப்பு இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், அதிலிருந்து மீளவும், எல்லை தாண்டிய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.

3. செயற்கை நுண்ணறிவு நகரங்கள் நிலையான, தொழில்நுட்பம் சார்ந்த நகர்ப்புற சுற்றுச்சூழல் அமைப்புகளின் வளர்ச்சியை துரிதப்படுத்துதல்.

4. அரசு தொழில்நுட்பம் (GovTech) இலக்கவியல் கண்டுபிடிப்பு மூலம் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்துதல்.

5. டிஜிட்டல் படைப்பாற்றல் கேமிங், அனிமேஷன் மற்றும் இலக்கவியலை அடிப்படையாகக் கொண்ட கலைகளை மேம்படுத்துதல்.

மேற்கண்ட அம்சங்களை அமல்படுத்தவும், வலுப்படுத்தவும் மலேசியா செயற்கை நுண்ணறிவு உச்சநிலை மாநாடு (ஜூன்), ASEAN 5G & IoT உச்சநிலைமாநாடு (ஆகஸ்ட்), ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ கோலாலம்பூர் (செப்டம்பர்), SmartGov உச்சநிலை மாநாடு (அக்டோபர்), மற்றும் லெவல் அப் KL விளையாட்டு 2025 (நவம்பர்). உட்பட ஒன்பது முக்கிய நிகழ்வுகளை 2025 இல் நடத்தும்.


ஆக இதன் வழி, முதலீடுகளை ஈர்ப்பதோடு புதுமையான இலக்கவியல் திட்டங்களை வலுப்படுத்தி, அண்டை நாடுகளோடு நல்லதொரு தொடர்பை உருவாக்க இது வகை செய்யும்.

இந்த சந்திப்பின் போது, தாய்லாந்தின் துணைப் பிரதமரும் இலக்கவியல் பொருளாதாரம் மற்றும் சமூக அமைச்சருமான பிரசெர்ட் ஐந்தரருவாங்டாங்குடன் கோபிந்த் இருதரப்பு விவாதங்களை நடத்துவார். ஆசியான் பொதுச் செயலாளர் டாக்டர் காவ் கிம் ஹார்ன்; மற்றும்  McFeeters, US- ASEAN வர்த்தக கவுன்சிலின் மூத்த துணைத் தலைவரான அவர் ஆசியான் உறுப்பு நாடுகளான இந்தோனேசியா, சீனா, ஜப்பான், கொரியா குடியரசு மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) ஆகிய நாடுகளின் உரையாடல் மற்றும் மேம்பாட்டு பங்காளிகளுடன் சந்திப்புகளை நடத்துவார்.




மேலும் ADGMIN உரையாடல் அமர்வுகளில் முக்கிய பங்கேற்பார்.மலேசியா ஆசியான் மாநட்டிற்குத் தலைமையேற்கும் நிலையில், இலக்கவியல் துறையில் முன்னோடியாகத் திகழ இது வகை செய்யும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *