ஐந்து ரகசிய குண்டர் கும்பலைச் சேர்ந்த 21 பேர் கைது! புக்கிட் அமான் அதிரடி!

top-news
FREE WEBSITE AD


 கோலாலம்பூர்: 21 பேர் கைது செய்யப்பட்டதன் மூலம் ஐந்து ரகசிய குண்டர் கும்பல்களின் கூட்டணி கலைக்கப்பட்டுள்ளது.

ஜொகூர், பகாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய இடங்களில் சூதாட்டம் மற்றும் இரகசிய சங்கங்கள் (D7) எதிர்ப்புப் பிரிவின உதவியுடன், CIDயின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு (D14) மே 3 ஆம் தேதி மேற்கொண்ட ஒரு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 28 முதல் 51 வயதுடையவர்கள் என்று புக்கிட் அமான் சிஐடி இயக்குநர்  டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் கூறினார் .

இன்று புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​"டிஆர் கேங் என்று அழைக்கப்படும் ஒரு கூட்டணியை அவர்கள் உருவாக்கியதாகவும், அவர்கள் 2019 ஆண்டு  முதல் செயல்பட்டு வருவதாக தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சிலாங்கூரில் தீவைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக இந்த கூட்டணி பெயர்பெற்றது என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டணியை வீழ்த்துவதற்கு முன்பு சுமார் இரண்டு ஆண்டுகளாக தாங்கள் கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை சேகரிப்பை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

சந்தேக நபர்களில் 20 பேர் மீது இன்று கிள்ளான் அமர்வு நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டத்தின் 130V பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்படும் என்று அவர் கூறினார்.

அவர்களில் ஒருவர் தேசிய இதய நிறுவனத்தில் (IJN) சிகிச்சை பெற்று வருவதால், அவர் மீது குற்றம் சாட்ட முடியவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

இது தவிர இன்னும் சம்பந்தப்பட்ட  கும்பல்களின் மிச்சமுள்ளவர்களைக் கண்காணித்து வருவதாக  அவர் குறிப்பிட்டார்.

மேலும் 10 கும்பல்களைச் சேர்ந்த உறுப்பினர்களை வேட்டையாட வேண்டியிருப்பதால்,  இந்த சிறப்பு நடவடிக்கை தொடர்கிறது என்றும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை வீழ்த்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் சுஹைலி தெரிவித்தார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *