3 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருள்கள் பறிமுதல்! – காவல்துறை
- Sangeetha K Loganathan
- 11 Nov, 2024
நவம்பர் 11,
பினாங்கில் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினர்கள் நடத்திய சோதனையில் 3 மில்லியன் மதிப்பிலான பல்வேறு வகையானப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தலைமை இயக்குநர் Datuk Seri Khaw Kok Chin தெரிவித்தார்.
ஜார்ஜ்டவுனில் உள்ள Tanjung Bungah குடியிருப்புப் பகுதியில் 32 முதல் 54 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து 13,991 gram அளவிலான எக்ஸ்தாஸி வகை போதைப்பொருள், 6029 கிராம் SYABU வகை போதைப்பொருள், 4997 கிராம் KETAMIN வகை போதைப்பொருள் மட்டுமின்றி, போதைப்பொருள் தயாரிக்கும் இயந்திரங்களையும் பறிமுதல் செய்துள்ளதாக இன்று பினாங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தலைமை இயக்குநர் Datuk Seri Khaw Kok Chin தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்களுக்குப் போதைப்பொருளை அனுப்பி வைக்கப்பதாக நம்பப்படும் ஆடவரை LEMBAH KLANG பகுதியில் கைது செய்துள்ளதாகவும் அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இதில் சம்மந்தப்பட்ட நபர்களான ஐவரையும் தனித்தனியாக விசாரித்து வருவதாகவும் அவர்களின் பின்னணியில் உள்ள கும்பலைத் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Lima lelaki ditahan dalam serbuan di Pulau Pinang membongkar makmal memproses dadah di rumah sewa, merampas 13,991 g pil dan serbuk ekstasi, 6,029 g syabu, 4,997 g ketamin, bernilai RM3 juta.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *