122,000 மாணவர்கள் பாதிப்பு! உடனடியாகத் தொடங்கிய பயிற்சிகள்! - கல்வி அமைச்சர் Fadhlina அதிரடி!

top-news

நாடு முழுவதும் 122,000 பள்ளி மாணவர்கள் வாசித்தல், எழுதுதல், கணக்கவியல் ஆகியவற்றில் பின்தங்கி இருப்பதாகக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார். கல்வி அமைச்சின் 3M ஆய்வின் அடிப்படையில் இது தெரிய வந்ததாகவும் வருத்தமளிக்கும் நிலையில் ஆய்வின் முடிவுகள் இருந்தாலும் கல்வி அமைச்சு இதற்கானக் காரணங்களையும் அதற்கானச் சீர்த்திருத்தங்களையும் முன்னெடுக்கவுள்ளதாக Fadhlina Sidek உறுதியளித்தார். முக்கியக் காரணமாக வறுமையும், தொடக்கக் கல்வியும், அடிப்படைத் தேவைகள் இல்லாமையும், கோவிட் 19 பொதுமுடக்கங்கள் என முக்கியக் காரணிகளாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் தெரவித்தார்

மாநிலக் கல்வி இலாகாவுடன் இணைந்து இதற்கானச் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் இதன் தொடக்கமாகச் சிலாங்கூர் கல்வி சீர்த்திருத்த நிர்ணயத் திட்டத்தின் மூலமாகச் செயல்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 3M என்பது எழுதுதல், வாசித்தல், கணக்கியல் என்பதால் மும்முறைமைகளில் பயிற்சித் திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Seramai 122,000 murid Tahun Satu belum menguasai kemahiran membaca, menulis, dan mengira (3M) disebabkan pandemik, kemiskinan, dan keperluan khas. Program intervensi dilaksanakan untuk memperbaiki keadaan ini, termasuk Program Tekad Reformasi Pendidikan di Selangor untuk memperkasa pendidikan dan modal insan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *