41 பாலஸ்தீனர்களுக்கும் மலேசியாவில் தக்க சிகிச்சையளிக்கப்பட்டது-தற்காப்பு அமைச்சு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 23–

மலேசியாவுக்கு வரவழைக்கப்பட்ட 41 பாலஸ்தீனர்களுக்கும் மலேசியாவில் தக்க சிகிச்சையளிக்கப்பட்டது என்பதை தற்காப்பு அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது.காயங்களுக்காக சிகிச்சையளிக்கப்பட்ட முப்பத்தேழு பேர் மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டனர்.எஞ்சிய நால்வர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று நாடாளுமன்ற இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் துவாங்கு மிஸான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்று அது குறிப்பிட்டுள்ளது.பாலஸ்தீன நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெரிவிக்கும்படி தேசிய முன்னணியின் பெக்கான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமது பூஸி முகமது அலி முன்னதாக மக்களவையில் கேட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக அந்த அறிக்கைைைய தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

அரசியல் நோக்கத்துடன்தான் பாலஸ்தீனர்களை அரசாங்கம் நாட்டுக்கு வரவழைத்தது என்று கூறப்படுவதையும் அது மறுத்துள்ளது.பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலியத் தற்காப்புப் படையினர் மேற்கொண்ட வன்முறை நடவடிக்கைகளையும் அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதியிலிருந்து குறிப்பாக காஸா பிரதேசத்தில் அவர்கள் நடத்திவரும் தாக்குதலில் 96, 625 பேர் காயமுற்றிருப்பதோடு 41,689 பேர் மரணமடைந்தனர். அவர்களுள் எழுபது விழுக்காட்டினர் பெண்களும் குழந்தைகளும் ஆவர் என்றும் அந்த அறிக்கை கூறியது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *