காஸாவிற்கு இதுவரை 45 மில்லியன் ரிங்கிட் நன்கொடைகள்
- Shan Siva
- 12 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 12: அக்டோபர் 7, 2023 அன்று போர் வெடித்ததில் இருந்து காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மலேசியா 45 மில்லியன் ரிங்கிட் நன்கொடைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை இதுவரை வழங்கியுள்ளது என்று வெளியுறவுத்துறை துணை அமைச்சர் முகமது ஆலமின் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்
முதல் ரஃபா எல்லை வழியாக காசாவுக்கு மலேசியாவில் இருந்து 5,000 டன்களுக்கும்
அதிகமான மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கான
பாலஸ்தீனியர்கள் பயனடைந்துள்ளனர்.
மே 7 அன்று ரஃபா எல்லைக் கதவு
மூடப்பட்ட பிறகு நிலைமை இப்போது மிகவும் சவாலானதாகி வருகிறது. ஜோர்டானில் உள்ள
கிங் ஹுசைன் பாலம் வழியாக மட்டுமே இன்னும் உதவிப் பாதை இயங்குகிறது.
அந்த காரணத்திற்காக, ஜோர்டானிய அரசாங்கத்துடன் நமது ஒத்துழைப்பை
பலப்படுத்துகிறோம். அந்தப் பாலம் மூலம் உதவிப் பணியில் பங்கேற்க ஒப்புக்கொண்டோம் என்று
அவர் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *