தலைநகரில் 64 வெளிநாட்டினர்கள் கைது!
- Sangeetha K Loganathan
- 07 Nov, 2024
நவம்பர் 7,
குடிநுழைவுத் துறை, கோலாலம்பூர் நகராண்மைக் கழகம், சுற்றுச்சூழல் சுகாதார ஆணையம் இணைந்து நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த 64 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டனர்.
BUKIT BINTANG’கில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் பலகைகளால் செய்யப்பட்ட வீடுகளில் வெளிநாட்டினர்கள் அதிகமாகத் தங்கியிருப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாகவும் சுமார் 102 வெளிநாட்டினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 64 பேர் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கி வலை செய்வது தெரிய வந்துள்ளதாகக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
பாக்கிஸ்தான், இந்தோனேசியா, மியான்மார், பங்களாடேஷ், நேபால் ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் வந்து, இங்கே வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
seramai 64 orang warga asing telah ditahan hasil daripada serbuan terhadap unit kediaman yang dilaksanakan oleh DBKL dan Jabatan Imigresen.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *