பினாங்கில் வெளிநாட்டுக் கலைஞர்கள் கைது! – குடிநுழைவுத் துறை

top-news

12 அக்தோபர்

முறையான அனுமதியில்லாமல் வெளிநாட்டுக் கலைஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பினாங்கு குடிநுழைவுத் துறையினர் 6 வெளிநாட்டினர்களைக் கைது செய்துள்ளதாக அதன் இயக்குநர் Nur Zulfa Ibrahim தெரிவித்தார்.

பொது சுற்றுலா கடவுச் சீட்டுடன்  மலேசியாவுக்கு வந்து கலைப்படைப்புகளை நிகழ்த்தியதாக 40 முதல் 50 வயதுள்ள 2 தைவான் ஆண்களும் 2 தைவான் பெண்களும் 2 சிங்கப்பூர் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக Nur Zulfa Ibrahim தெரிவித்தார்.

பிற நாட்டுக் கலைஞர்கள் மலேசியாவில் படைப்பாற்ற முன் அனுமதிகள் பெற்றிருக்க வேண்டும் என்பதை Nur Zulfa Ibrahim வலியுறுத்தினார். முன் அனுமதி பெறாமல் படைப்பை வழங்கிய 6 வெளிநாட்டினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்

6 pelakon opera warga asing ditahan Imigresen Pulau Pinang kerana melanggar syarat pas masuk dengan membuat persembahan tanpa permit sah. Mereka disiasat dan mungkin dikenakan tindakan di bawah Peraturan Imigresen 1963.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *