ஒன்பது மாதங்களில் சாலை விபத்துகளில் 779 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்-முகமது யூஸ்ரி!
- Muthu Kumar
- 24 Oct, 2024
ஈப்போ, அக். 24-
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் மொத்தம் 779 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று புக்கிட் அமான் சாலைப் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பஸ்ரி நேற்று தெரிவித்தார்.
அந்த காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட 4,043 சாலை விபத்துகள் நிகழ்ந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.கவலையளிக்கக்கூடிய இப்போக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கவனத்திற்கும் எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளோட்டிகளை இலக்காகக் கொண்டு பல நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக, சாலை விபத்துகளைத் தடுப்பதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
இதர வாகனங்களுடன் ஒப்பிடுகையில் மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள்தான் அதிகம் நடக்கின்றன என்று ஈப்போவில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பதினேழு வயதுக்கும் குறைந்த 498 பள்ளி மாணவர்கள் “மாட் ரெம்பிட்" எனப்படும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது என்றும் யூஸ்ரி சொன்னார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *