ஹலால் சான்றிதழ் வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு RM80 மில்லியன்!
- Muthu Kumar
- 29 Oct, 2024
கோலாலம்பூர், அக் 29:
2012 மற்றும் 2023 க்கு இடையில் ஹலால் சான்றிதழ் வழங்கியதன் மூலம் அரசாங்கம் RM80 மில்லியனுக்கும் அதிகமான கட்டணத்தை வசூலித்துள்ளது என்று செனட்டர் டத்தோ டாக்டர் முகமட் நயிம் மொக்தார் தெரிவித்தார்.Labis எம்பி பாங் ஹோக் லியோங்கின் கேள்விக்கு பதிலளித்ததில், மொத்த வசூல் RM80,032,254.43 என்று பிரதமர் துறை அமைச்சருமான அவர் கூறினார்.
இந்த புள்ளிவிவரங்கள், குறிப்பாக உலகளாவிய ஹலால் சந்தையில், மதிப்பு கூட்டப்பட்ட சேவையாக ஹலால் சான்றிதழின் முக்கியத்துவம் குறித்த மலேசிய தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறையினரிடையே வளர்ந்து வரும் விழிப்புணர்வை பிரதிபலிக்கிறது என்று முகமட் நயிம் கூறினார்.இதே காலப்பகுதியில் 85,893 நிறுவனங்கள் ஹலால் சான்றிதழைப் பெற்றுள்ளன என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *