நாக சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம்-முன்னாள் மனைவி சமந்தா கருத்து!

- Muthu Kumar
- 04 Dec, 2024
நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் திருமணம் நடக்கவிருக்கிறது.இதில் பாலிவுட்டிலிருந்து கோலிவுட் வரை ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். மொத்தம் 8 மணி நேரம் இந்தத் திருமணம் நடக்கவிருக்கிறது. மேலும் இதற்காக நாகார்ஜுனா 200 கோடி ரூபாய்வரை செலவு செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இருவருக்குமான திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. அதனையடுத்து சமந்தா தனியாக இருக்கும் சூழலில்,நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். இருவருக்குமான நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு சிம்பிளாக நடந்து முடிந்த சூழலில்; அவர்களது திருமணம் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அதன்படி அவர்களுக்கு இன்று திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த திருமணம் பிறகு ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டது. அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இருக்கும் நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். இந்தத் திருமணத்தை நாகார்ஜுனாவின் குடும்பம் மிகப்பெரிய சந்தோஷத்தோடு அணுகியிருக்கிறது. முக்கியமாக இதன் மூலம் நாக சைதன்யாவின் நிம்மதியை மீட்டுக் கொடுத்திருக்கிறோம் என்று நாகார்ஜுனா நெகிழ்ச்சியோடு கூறியிருந்தார்.
இந்தத் திருமணத்தை படு பிரமாண்டமாக நடத்துவதற்கு நாகார்ஜுனா திட்டமிட்டிருக்கிறாராம். அதாவது இத்திருமணத்துக்கு அவரது குடும்பம் 200 கோடி ரூபாய்வரை செலவு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தத் திருமணம் ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை நடக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்தத் திருமணத்தில் ஷாருக்கான், அமிதாப் பச்சன், அமீர் கான், எஸ்.எஸ்.ராஜமௌலி என பலரும் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சோபிதா துலிபாலாவின் தங்கை சமந்தா இந்தத் திருமணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாக போஸ்ட் போட்டிருக்கிறார். அந்தப் போஸ்ட்டில் அவர் நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் புகைப்படங்களை பகிர்ந்து, 'மிகவும் அன்பான மனிதர். உங்களுக்கு எனது காதல் மட்டும்தான் அக்கா''என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் அதனை அதிகம் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.
முன்னதாக நேற்று நாக சைதன்யா - சோபிதா திருமண விழா களைகட்டியது. அவருக்கு ஹல்தி விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் சிவப்பு நிற புடவையில் இருந்தார். அவருக்கு உறவினர்கள் மஞ்சள் பூசி தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். இன்று நடக்கவிருக்கும் திருமணம் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *