அற்புதமான மனிதர் என்று ஆடியோ வெளியிட்ட ஏ ஆர் ரஹ்மான் மனைவி சாயிரா!

- Muthu Kumar
- 25 Nov, 2024
இந்திய சினிமாவில் இசைப்புயல் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கர் நாயகன் என்று ரசிகரக்ளால் அழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து கோலிவுட், பாலிவுட் என பிசியாக இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை விட்டு விலகுவதாக இவர் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 19-ம் தேதி தங்களது 29 ஆண்டு கால திருமண உறவைப் விட்டுப் பிரிவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் அவரது மனைவி சாயிரா பானு ஆகியோர் அறிவித்தனர். இது ரசிகரக்ளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த செய்தி வெளியான பிறகு சமூக வலைதளங்களிலும் சில செய்தி ஊடகங்களிலும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் குறித்தும் அவரது மனைவி சாயிரா பானு குறித்தும் பல்வேறு வதந்திகள் உலா வரத் தொடங்கியது. இதற்கு ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் மகள் என குடும்ப உறுப்பினர்கள் தங்களது வலி நிறைந்த எதிர்ப்பை சமூக வலைதளம் மூலம் பதிவிட்டு வந்தனர்.
இதுகுறித்து ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் தனது சமூகவலைதள பக்கத்தில் தயவு செய்து வதந்தியை பரப்பாதீர்கள் என்று வேதனையான பதிவை வெளியிட்டார். அதில் என் அப்பா ஒரு லெஜண்ட் என்றும் இசைத்துறையில் அவர் செய்த சாதனைக்காக மட்டும் அல்லாமல் பல ஆண்டுகளாக அவர் பெற்ற மதிப்பு, மரியாதை, அன்பு ஆகியவற்றிற்காகவும் அவர் லெஜண்ட்டாக இருக்கிறார் என்றும் அமீன் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று ஏ ஆர் ரகுமான் தரப்பில் இருந்து அவதூறு பரப்பும் சமூக வலைதளம் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு எதிராகா நோட்டீஸ் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், சில சமூக வலைதள பக்கங்களிலும் சில யூடியூப் வீடியோக்களிலும் ஏ ஆர் ரகுமான் மற்றும் சாயிரா பானு பிரிவை குறித்து பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். சிலர் அவர்களின் தனிபட்ட வாழ்க்கை குறித்து பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தேவையற்ற செயல் ஆகும்.
சமூக வலைதளத்தில் யூடியூப் பக்கங்களிலும் சிலர் கற்பனையில் வெளியிட்ட பதிவுகளையும் காணொளிகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அப்படி நீக்காவிட்டால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சாயிரா பானு ரகுமான் மீது அவதூறு பரப்பாதீர்கள் என்று ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் சாயிரா ரகுமான் பேசுகிறேன். நான் தற்போது மும்பையில் இருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு உடல் நிலை சரியில்லை. அதன் காரணமாகவே நான் ஏ ஆர்-யிடம் இருந்து விலகி இருக்க முடிவு செய்தேன்.
நான் அனைத்து சமூக வலைதள பக்கங்கள் தமிழ் யூடியூப்கள் அனைத்திற்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து ஏ ஆர் ரகுமான் குறித்து தவறாக எதுவும் பேசாதீர்கள். அவர் ஒரு அற்புதமான மனிதர். இந்த உலகத்திலேயே சிறந்த மனிதன் அவர். இது முழுக்க முழுக்க எனது உடல் நிலை காரணமாக எடுத்த முடிவு.
நான் சென்னையில் இல்லை என்றால் நான் எங்கே போனேன் என்று தேடுவார்கள். நான் இங்கு மும்பைக்கு எனது சிகிச்சைக்காக வந்துள்ளேன். இந்த சிகிச்சைக்கா நான் பிசியாக இருக்கு ஏ ஆர் ரகுமானை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஏன் என் குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
ஏ ஆர் ரகுமான் ஒரு நல்ல மனிதர். நான் உங்களிடம் எல்லாம் கேட்டுக்கொள்வது தயவு செய்து அவரை அவராக இருக்க விடுங்கள். தவறாக பேசாதீர்கள். என் வாழ்க்கை முழுவதும் நான் ஏ ஆரை நம்புகிறேன். நான் அவரை அவ்வளவு காதலிக்கிறேன், அவரும் அப்படிதான். அதனால் தயவு செய்து அவர் மீதான தவறான குற்றச்சாட்டுகளை நிறுத்துங்கள்.
இன்னும் அதிகாரப்பூர்வமாக நாங்கள் எதையும் அறிவிக்கவில்லை. மேலும் நான் சென்னைக்கு விரைவில் வந்துவிடுவேன் எனது சிகிச்சை முழுவதும் முடிந்தவுடன். அதனால் தயவது செய்து அவரது பெயருக்கு களங்கம் விளைவிப்பதை நிறுத்துங்கள். முன்னரே சொன்னது போல அவர் ஒரு அற்புதமான மனிதர் என்று அந்த ஆடியோவில் சாயிரா பேசியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *