அதிரடியான சண்டைக் காட்சிகளோடு வெளியான ரஜினியின் "வேடையன்" ட்ரைலர்!

top-news
FREE WEBSITE AD

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படம் வெளியாக இன்னும் 8 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் ட்ரைலரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. வேட்டையன் படத்தைனை ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குநராக  ஞானவேல் இயக்கியுள்ளார்.

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 20ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் படக்குழு ட்ரைலரை வெளியிட்டுள்ளது.

வேட்டையன் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள 170வது படம். இந்தப் படத்தின் புரோமோசன் மற்றும் இவரது அடுத்தப்படமான கூலி படத்தின் படப்பிடிப்பு வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நலக் கோளாறினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படியான நிலையில் படக்குழு படத்தின் ட்ரைலரை ரிலீஸ் செய்துள்ளது. ஏற்கனவே படக்குழு வெளியிட்ட படத்தின் டீசர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது மட்டும் இல்லாமல், படத்தில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட பாடல்களில் மனசிலாயோ பாடல் வேறலெவல் ஹிட் ஆனது.

அனிருத் சூப்பர் ஸ்டார் என்றாலே கொஞ்சம் இறங்கி தரமான இசையை வெளிப்படுத்துவார். ஏற்கனவே ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற ஹுக்கும் பாடல் படத்தினை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அப்படி இருக்கும்போது இந்தப் படத்திலும் சூப்பர் ஸ்டாருக்கு பில்டப் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்தப் பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


படத்தின் டீசர் வெளியானபோது அமிதாப் பச்சனுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் தொடக்கத்தில் தமிழில் டப் செய்யப்பட்டது. ஆனால் அதனை பலரும் விமர்சிக்க, ஏ.ஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, அமிதாப் பேசுவதைப் போல் மீண்டும் டீசர் ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்கு ரசிகர்கள் தரப்பில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இப்படியான நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. டீசர் மொத்தம் நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ட்ரைலர் மொத்தம் 2 நிமிடங்கள் 39 நொடிகள் கால அளவுக்கு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. டீசரில் பாடல்கள் எதுவும் இடம் பெறவில்லை. மாறாக படத்தின் மையக்கருவை மட்டும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் இயக்குநர். அதிரடியான சண்டைக் காட்சிகளால் ட்ரைலர் நிரம்பி வழிகின்றது என ரசிகர்கள் குஷியாகி வருகின்றனர்.

அதேபோல் ட்ரைலரில் அனிருத்தின் இசை குறிப்பிடும்படியாக இல்லை. அதிலும் குறிப்பாக, படத்தில் இடம் பெற்றுள்ளா ஹண்டர் வண்டார் சூடுடா பாடலும் ட்ரைலரில் பெரிதாக எடுபடவில்லை என சிலர் குறிப்பிடுகின்றனர். அதேநேரத்தில் ட்ரைலரில் மஞ்சு வாரியர் ஒரு வார்த்தைகூட பேசாமல் உள்ளார். படம் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதியில் நடக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. மேலும் ட்ரைலரில் காண்பிக்கப்படும் கழுகு ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *