ஹலால் சான்றிதழ் மோசடி! - 140 வழக்குகள் பதிவு! RM 3.59 மில்லியன் பொருள்கள் கைப்பற்றப்பட்டது!
- Shan Siva
- 04 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 4: 2022 மற்றும் அக்டோபர் 2024 க்கு இடையில்
ஹலால் சான்றிதழ் மோசடி தொடர்பான மொத்தம் 140 வழக்குகள் பதிவாகியுள்ளதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும்
வாழ்க்கைச் செலவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வழக்குகளில்
முஸ்லிம்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களால் நடத்தப்படும் வளாகங்கள்
சம்பந்தப்பட்டதாகவும், RM3.59 மில்லியன்
மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.
இதனை அடுத்து உள்நாட்டு
வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு ஹலால் சின்னம் மற்றும் சான்றிதழ்
மோசடி விவகாரத்தை தீவிரமாகப் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஹலால் சான்றிதழ்
மோசடியைச் சமாளிக்க மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான ஜாகிம் மற்றும் மாநில
இஸ்லாமியத் துறைகளுடன் இணைந்து செயல்படுவதாக அமைச்சு மேலும் கூறியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *