தமிழ் ஹீரோக்கள் நடித்த படங்களுக்கு இடையூறு செய்யும் மலையாள ஹீரோ!
- Muthu Kumar
- 28 Oct, 2024
நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க முன்னணி இளம் நடிகராக இருக்கிறார். மலையாள சீனியர் நடிகர் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழில் ஓ காதல் கண்மணி, சீதாராமம், நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்களில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய படம் தக்லைப். இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க துல்கர் சல்மானை மணிரத்னம் கமிட் செய்திருந்தார். ஆனால் தனது சம்பளம் மற்றும் கால்ஷீட் குறித்து மணிரத்னம் எதுவும் கூறாததால், சில மாதங்கள் பொறுத்துப் பார்த்த துல்கர் சல்மான் அதன்பிறகு தக்லைப் படத்தில் இருந்தே விலகி விட்டார்.
தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள படம் லக்கி பாஸ்கர். இந்த படம் வருகிற தீபாவளிக்கு அதாவது வரும் 31ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட ராக்போர்ட் முருகானந்தம் என்ற வினியோகஸ்தர் விலைக்கு வாங்கியுள்ளார். இந்த படத்தை தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட அவர் முயற்சித்து வருகிறார்.
வருகிற தீபாவளிக்கு தமிழில் 3 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகின்றன. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்துள்ள அமரன் படம் வருகிற 31ம் தேதி தீபாவளிக்கு ரிலீஸாகிறது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்ட இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அதே போல் ஜெயம் ரவி, பூமிகா, பிரியங்கா மோகன், நட்டி உள்ளிட்டோர் நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில், பிரதர் என்ற படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அக்கா, தம்பி பாசத்தை மையப்படுத்திய இந்த படமும் 250க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் கவின் நடித்த பிளடி பெக்கர் படமும் தீபாவளி ரிலீஸ் என்பதால் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த சூழலில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படத்தை வெளியிட தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் ஒதுக்கப்படும் பட்சத்தில் இதனால் அமரன், பிரதர், பிளடி பெக்கர் படங்களுக்கு என ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தியேட்டர்களின் எண்ணிக்கை 50க்கு மேல் கணிசமாக குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழ் ஹீரோக்கள் நடித்த படங்களுக்கு இடையூறு செய்யும் விதமாக லக்கி பாஸ்கர் படம் வந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *