மலேசியா-அமெரிக்கா இறக்குமதி வரி விதிப்பு பேச்சுவார்த்தையில் சுமுகம் !

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 16-

அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக அந்நாட்டுடன் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அஸிஸ் நேற்று தெரிவித்தார். பல்வேறு விவகாரங்களுக்குத் தீர்வுகாணப்பட்டு விட்டது. இதர சில விவகாரங்கள் குறிப்பாக நாட்டின் வியூகவியல் துறைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் மீதான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவடையவில்லை.

இறக்குமதிக்கான வரி விதிப்பு விவகாரம்:...

அவற்றின் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தென் கொரியாவின் ஜேஜூவில் 31ஆவது ஆசியா- பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டில் வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இதுதான் பிரதானமான விஷயமாகப் பேசப்பட்டது என்றார்.

மலேசியப் பேராளர் குழுவினர் இம்மாதம் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வாஷிங்டனில் பேச்சுவார்த்தையைத் தொடர்வார்கள். அதற்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் (வர்த்தகம்) மஸ்தூரா அமாட் முஸ்தாபா தலைமையேற்பார். மேல்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக தெங்கு ஸஃப்ருல் ஜூன் மாதம் அமெரிக்கா செல்வார்.

ரகசியக் காப்பு உடன்பாட்டில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். ஆகவே, பேச்சுவார்த்தை விவகாரங்களை வெளியிட முடியாது. ஆனால், அந்த விவகாரங்கள் முக்கியத் துறைகள் சம்பந்தப்பட்டவை ஆகும் என்று தெங்கு ஸஃப்ருல் சொன்னார். அவற்றில் ஒன்று மின்தகடுகள் (செமிகண்டக்டர்ஸ்) சம்பந்தப்பட்ட துறையாகும். அது மலேசியாவுக்கு மட்டுமல்லாது அமெரிக்கத் தொழில்துறைக்கும் முக்கியமானதாகும் என்றார்.


Menteri Tengku Zafrul memaklumkan rundingan cukai import dengan AS berjalan lancar, dengan beberapa isu selesai. Isu berkaitan sektor strategik seperti semikonduktor masih dibincang. Malaysia akan sambung rundingan di Washington hujung Mei ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *