ஹஜ் புனித பயணம் சென்ற மலேசியர், மெக்காவில் மரணம்!

top-news
FREE WEBSITE AD

மெக்கா:  மலேசிய ஹஜ் பயணி ஒருவர் மெக்காவில் காலமானார் என்று மலேசிய ஹஜ் தூதுக்குழு தலைவர் டத்தோஸ்ரீ சையத் சலே சையது அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கெடா, அலோர் ஸ்டாரைச் சேர்ந்த 58 வயதான முகமட் ஜாஹிர் இஸ்மாயில், கடந்த  புதன்கிழமை  இரவு தனது முதல் உம்ராவுக்காக தவாஃப் செய்து கொண்டிருந்த வேளையில்,  மாரடைப்பு காரணமாக சரிந்து விழுந்தார்.

இறந்தவர் மே 29 ஆம் தேதி மெக்காவிற்கு வந்திருந்த KT66 குழுவைச் சேர்ந்தவர் என்றும்,  அன்று இரவு இஸ்யா தொழுகைக்குப் பிறகு அவர்களின் முதல் உம்ராவை தாங்கள் ஏற்பாடு செய்ததாகவும் சையத் அப்துல் ரஹ்மான் கூறினார்.

சம்பந்தப்பட்ட நபர் மயங்கி விழுந்ததும்,
மேலதிக சிகிச்சைக்காக சவூதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர், முகமட் ஜாஹிர் மஸ்ஜிதில் ஹராமில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக சையத் சலே கூறினார்.

இதனை அடுத்து, வியாழக்கிழமை மே 30 ஆம் தேதி மஸ்ஜித் ஹராமில் ஸஹோர் தொழுகைக்குப் பிறகு அவரின் நல்லுடல் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, அன்று பிற்பகல் சியாராய் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *