பசியைப் போக்க பந்தியிட்டு நிதி திரட்டிய பந்திங் லயன்ஸ் கிளப்!

top-news
FREE WEBSITE AD



பந்திங் லயன்ஸ் கிளப் சார்பில்  அப்பகுதி பி 40 தரப்பு மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு, நிதி திரட்டும் விருந்துபசரிப்பு நிகழ்வு, கடந்த சனிக்கிழமை ஜூன் 1-ஆம் தேதி நடைபெற்றது.

பந்திங், தெலூக் டத்தோ SMK மெத்தடிஸ்ட் பள்ளியில் நடைபெற்ற இந்த விருந்துபசரிப்பில் நன்கொடையாளர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கலந்துகொண்டனர்.




"குளு குளு அறையில்தான் வழக்கமாக இது போன்ற நிதி திரட்டும் விருந்துபசரிப்பு நடைபெறும். ஆனால், நாங்கள் வெட்ட வெளியில் எல்லாரும் ஒரே பந்தியில் அமர்ந்து சாப்பிடும் வகையில் இதனை ஏற்பாடு செய்துள்ளோம்.

நிறைய நல்ல உள்ளங்கள், செல்வந்தர்கள் இதற்கான நிதியை வழங்கியிருக்கிறார்கள். அவர்களும் மக்களோடு அமர்ந்து எல்லாருமே வி.ஐ.பி களாகச் சாப்பிட்டு மகிழவேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. உணவும் நம் தோட்டப்புறத்தில் விழாக்காலத்தில் சாப்பிடுவதைப் போல ஆடு, கோழி, மீன் என வாழை இலையில் வைத்துப் பரிமாறி மகிழ்கிறோம்.

வருடா வருடம் இது போன்ற நிகழ்வுகள் மூலம் கிடைக்கும் நிதியில், பந்திங் வட்டாரத்தில் பி 40 தரப்பைச் சேர்ந்த மக்களுக்குச் சேவைகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம். அனைத்து இன மக்களுக்கும் லயன்ஸ் கிளப் தொடர்ந்து சேவையாற்றி வருகிறது. மென்மேலும் எங்களது மக்களுக்கான சேவை தொடரும்" என ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோ வேலா தெரிவித்தார்.

"ஏழை மக்களின் பசியைப் போக்க பந்தியிட்டு நிதி திரட்டி  பசியாற்றும் எங்களின் இந்தப் பணி எப்போதும்  தொடரும்" என்கிறார் டத்தோ வேலா.

இந்தப் பசி போக்கும்  திட்டம் 2வது ஆண்டாக,பந்திங் லயன்ஸ் கிளப் ஏற்பாடு செய்துள்ளது.  முதல் ஆண்டில் RM 25,000 வெள்ளி நிதி திரட்டப்பட்டது.

2-வது ஆண்டான இந்த நிகழ்வில்,  RM 50,000 வெள்ளி திரண்டுள்ளது

2025 இல் நடைபெறும் 3வது ஆண்டு நிகழ்வில் RM 100,000 திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து நிதியுதவிகளும், கோலா லங்காட் சிலாங்கூரில் உள்ள அனைத்து மலேசியர்களின் B40 சமூகத்தினருக்கு உணவு, மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவிகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிகழ்வின் முக்கிய நன்கொடையாளர்களில் ஒருவரான  ராஜசேகரன் குப்புசாமி, தாய்லாந்தில் வசிக்கும் முன்னோடி திரைப்படத் தயாரிப்பாளரும், சமூக சேவகருமான டான்ஸ்ரீ எல்.கிருஷ்ணனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி தாம் பந்திங்கைச் சேர்ந்த, பின்தங்கிய சமூகங்களுக்கு நிதியுதவி செய்து வருவதாகவும், நிறைய நல்ல உள்ளங்களும் தொடர்ந்து இந்த நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் தெரிவித்தார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *