சுங்கை நிபோங் கடற்கரை பாதிப்பு இன்னும் சில தினங்களில் சீரமைக்கப்படும்!

top-news
FREE WEBSITE AD

சபாக் பெர்ணம் செப்.26-

அண்மையில், சுங்கை நிபோங் கடற்கரை வளாகத்தில் கடல் நீர்ப் பெருக்கு காரணமாக ஏற்பட்ட மோசமான பாதிப்புகளைக் கண்காணித்து வந்துள்ள சபாக் பெர்ணம் மாவட்டமன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் பணியாளர்கள் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

நேற்று காலையில் கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவன குத்தகைப் பணியாளர்களுடன் சுங்கை நிபோங் கடற்கரை வளாகத்தில் குவிந்து கிடந்த குப்பைகள், கனிம நீர்ப் பாட்டில்கள், நெகிழிப் பைகள் மற்றும் அங்குமிங்கும் தூக்கி எறியப்பட்ட நிலையில் இருந்த மீதப்பட்ட உணவுப் பொட்டலங்கள் ஆகியவற்றை அங்கிருந்து அகற்றும் பணிகளில் ஈடுபட்டதாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி மன்சோர் இப்ராஹிம் தெரிவித்தார்.

வாரஇறுதி நாட்களில் இங்கு வந்து செல்லும் வெளியூர், உள்ளூர் சுற்றுப் பயணிகளைக் கவரும் வகையில் அதற்கான அடிப்படை வசதிகளை சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் மேம்படுத்தி வரும் இந்தத் தருணத்தில் பருவநிலை மாற்றத்தால் கடந்த சில தினங்களாக கடல் அலைகள் மிகுந்த சீற்றத்துடன் பொங்கிப் பெருகியதால் கடலோரத்தில் அமைந்துள்ள உணவகங்களில் நீர் தேங்கியதுடன் 2 அடி உயரம் வரை வெள்ளம் ஏற்பட்டுள்ளது எதிர்பாராத சம்பவம் என்று அவர் கூறினார்.

தற்போது இதற்கான பணிகள் தொடரப்படும் நிலையில் இன்னும் சில தினங்களில் துப்புரவு நடவடிக்கைகள் நிறைவு பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாக மன்சோர் தெரிவித்தார்.





ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *