இன்றிரவு 12 மாநிலங்களுக்குப் புயலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை! – MET MALAYSIA!

- Sangeetha K Loganathan
- 16 Jun, 2025
ஜூன் 16,
இன்று இரவு வரையில் 12 மாநிலங்களில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA எச்சரிக்கைவிடுத்துள்ளது. இடியுடன் கூடிய கனமழையுடன் 20 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசும் அபாயம் இருப்பதாகவும் இந்த புயல் அளவீடு குறைந்தப்பட்சமாகக் கணிக்கப்பட்டிருப்பதாகவும் MET MALAYSIA தெரிவித்துள்ளது. ஒரு சில மாநிலங்களின் முக்கிய மாவட்டங்கள் பாதிக்கபடவிருப்பதால் சம்மந்தப்பட்ட மாவட்ட மீட்பு ஆணையங்களுக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதாக MET MALAYSIA தெரிவித்துள்ளது.
Perlis, Kedah, Pulau Pinang, Perak, Selangor, Pahang, Negeri Sembilan, Johor ஆகிய மாநிலங்களில் புயல் தாக்கும் மாவட்டங்களை அடையாளம் கண்டிருப்பதாக MET MALAYSIA தெரிவித்துள்ளது. பேராக்கில் Kerian, Larut, Matang, Selama, Manjung ஆகிய பகுதிகளில் புயல் தாக்கும் என்றும் பகாங்கின் Jerantut, Maran, Kuantan வழியாகப் புயல் கிழக்கு கடற்கரையை அடையும் என்றும் MET MALAYSIA கணித்துள்ளது. புயலின் தாக்கத்தால் பெரிதளவில் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க மீட்பு ஆணையத்திற்கு எச்சரிக்கை வழங்கப்பட்டிருப்பதாகவும் புறநகர் பகுதிகளிலும் நீர் நிலை பகுதிகளுக்கு அருகிலுள்ள குடியிருப்புவாசிகளைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகளையும் மீட்புப் படையினர் மேற்கொண்டு வருவதாகவும் தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA தெரிவித்துள்ளது.
MET Malaysia mengeluarkan amaran ribut petir dan hujan lebat di 12 negeri malam ini dengan angin kencang 20 km/j. Antara kawasan terjejas ialah Perlis, Kedah, Pulau Pinang, Perak, Pahang, Johor dan lain-lain. Operasi pemindahan dijalankan di kawasan berisiko.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *