வெளிநாட்டினர்கள் பயன்படுத்திய 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 16 Jun, 2025
ஜுன் 16,
அம்பாங்கில் வேலை செய்து வரும் அதிகமான வெளிநாட்டினர்கள் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்துவதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெற்ற நிலையில் அம்பாங் சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெளிநாட்டினர்கள் பயன்படுத்திய 11 மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்துள்ளதாக அம்பாங் மாவட்டப் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு ஆணயம் தெரிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களிலும் கடைகளிலும் வேலை செய்து வரும் வெளிநாட்டினர்கள் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்துவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தனியார் நிறுவனங்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் சொந்தமானது என்றும் வெளிநாட்டினர்களுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட 11 மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வெளிநாட்டினர்களைத் தடுப்புக் காவலில் வைத்திருப்பதாகவும் அம்பாங் மாவட்டப் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு ஆணயம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebanyak 11 motosikal yang digunakan warga asing disita dalam operasi di Ampang susulan aduan orang awam. Motosikal milik syarikat dan individu tempatan disewakan kepada warga asing. Pihak berkuasa sedang menyiasat pemilik motosikal dan menahan warga asing terbabit.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *