ஹம்ஸா Vs அஸ்மின்! - பெர்சாத்துவுக்குள் பினாமி போர்!
- Shan Siva
- 07 Oct, 2024
அடுத்த மாதம்
நடைபெறவுள்ள பெர்சாத்துவின் கட்சித்
தேர்தல் ஹம்சா ஜைனுதினுக்கும் அஸ்மின் அலிக்கும் இடையே ஒரு பினாமி போராக இருக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தலைவர்களும் கட்சிக்குள் தங்கள் செல்வாக்கை
விரிவுபடுத்த போட்டி மனப்பான்மையில் இருப்பதாகத் தெரிகிறது.
அம்னோ மற்றும்
பிகேஆர் ஆகிய இரு தலைவர்களும், உச்ச மன்றம் மற்றும் துணைப் பிரிவுகள் உட்பட
கட்சி முழுவதும் முக்கிய பதவிகளில் தங்கள் பினாமிகள் அல்லது வலது கரமாக இருப்பவர்களை
நியமிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். இதேபோல் பெர்சாத்துவிலும் இருவருக்கும் இடையில்
பினாமி போர் நிகழ்வதாகத் தெரிகிறது.
20 இடங்களுக்கு 80 வேட்பாளர்கள்
போட்டியிடும் நிலையில், உச்சமன்றத்துக்கான போட்டியில் இரு
பிரிவினருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இளைஞர்
பிரிவுக்கு, 15 இடங்களுக்கு 45 வேட்பாளர்கள்
போட்டியிடுகின்றனர்.
பெர்சாத்துவின் மகளிர் பிரிவைப் பொறுத்தவரை, இது ஆரம்பத்தில் அஸ்மினுடன் இணைந்த ரினா ஹருனுக்கும் ஹம்சாவின் முகாமைச்
சேர்ந்த மாஸ் எர்மியாட்டி சம்சுதினுக்கும் இடையேயான போட்டியாக இருந்தது.
இருப்பினும், ரீனா தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார், மேலும் அஸ்மினின்
முகாமில் இருந்து யாரும் பெண்கள் பிரிவில் முதலிடத்திற்கு போட்டியிடவில்லை என்று
அவர் கூறினார்.
அஸ்மினின் முகாம்
இளைஞர் பிரிவில் செல்வாக்கு பெறுவதற்கு தனது கவனத்தை மாற்றுவதாக சில ஆதாரங்கள் காட்டுகின்றன!
பெர்சாத்துவில், குறிப்பாக உச்ச மன்றத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை யார்
கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை கட்சி தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *