Yinxing சூறாவளி தாக்கும் அபாயம்! – தென்சீனக் கடலில் சீற்றம் ஏற்படலாம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 8: மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா Yinxing சூறாவளி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் லாவோக் நகருக்கு வடமேற்கே சுமார் 118 கி.மீ தொலைவில் சூறாவளி நிலைகொண்டுள்ளதாக மெட்மலேசியா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காலை 8 மணி கண்காணிப்பின் அடிப்படையில், சூறாவளி மேற்கு நோக்கி மணிக்கு 20 கிமீ (கிமீ/மணி) வேகத்தில் நகர்வதாகவும், அதிகபட்சமாக மணிக்கு 139 கிமீ வேகத்தை எட்டும் என்றும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையால் தென் சீனக் கடல் பகுதியில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *