16 வயது பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில் ஆடவர் சுட்டுக் கொலை - கிள்ளானில் போலீஸார் அதிரடி

- Tamil Malar (Reporter)
- 14 Apr, 2025
(இரா.கோபி)
கிள்ளான், ஏப்ரல் 14: சிரம்பானில் 16 வயது பெண்ணை கடத்தியது தொடர்பாக
போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் அப்பெண்ணைக் கடத்திய 21 வயது ஆடவன் இன்று அதிகாலை
5.30 மணி அளவில் கிள்ளான் பண்டார் புக்கிட் திங்கியில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
குற்றச்செயல்கள் அதிகரித்தால்
அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் புக்கிட் அமானில் உள்ள குற்றப்
புலனாய்வுத் துறையின் துணை இயக்குநர் டத்தோ ஃபாதில் மார்சஸ் எச்சரித்தார்.
யாராக இருந்தாலும்
தயவு தாட்சண்யம் இன்றி அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின்
குடும்பத்தினர் RM280,000 மற்றும் பல
நகைகளை செலுத்துவதற்கு முன்பு கடத்தல்காரர்கள் RM2 மில்லியன் மீட்கும் தொகையை கோரியதாகக் கூறப்படுகிறது என்று
டத்தோ ஃபாதில் மார்சஸ் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்
மறுநாள் இரவு 8:30 மணிக்கு செண்டாயானில்
விடுவிக்கப்பட்டார்.
பின்னர் போலீஸ்
விசாரணைகள் பல சோதனைகள் மற்றும் கைதுகளுக்கு வழிவகுத்தன.
இந்நிலையில், இன்று காலை 5 மணியளவில்,
21 வயது சந்தேக நபர் கிள்ளான்
பகுதியில் உள்ள ஓர் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.
பின்னர் ஒரு
போலீஸ் குழு சந்தேக நபர் ஓட்டிச் சென்ற காரை பண்டார் புக்கிட் திங்கி, ஜாலான் பாயு திங்கி வரை துரத்தியது.
சந்தேக நபர் காரை
நிறுத்த மறுத்து, போலீஸ் வாகனத்தை
மோதிவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, சந்தேக நபர்
இருந்த காரை இடைமறித்து போலீஸார் துப்பாக்குச்சூடு மேற்கொண்டதாக அவர் கூறினார்.
அந்நபரின் வாகனத்தைச் சோதனையிட்டதில் ஒரு துப்பாக்கி மற்றும் ஒரு கத்தியை போலீசார்
கண்டுபிடித்தனர்.
கடத்தல் குழுவை முடக்குவதற்கு வழிவகுத்த தகவல்களை வழங்கியதற்காக அவர் சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்!
Seorang lelaki berusia 21 tahun ditembak mati oleh polis di Klang kerana menculik gadis 16 tahun di Seremban. Suspek enggan berhenti, melanggar kenderaan polis dan melepaskan tembakan. Polis menemui pistol dan pisau dalam keretanya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *