பந்திங் சட்டமன்ற மக்கள் மையம் வாக்காளர்கள் நலன் கேட்டறிந்து உரிய நடவடிக்கை!

- Muthu Kumar
- 12 Apr, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
பந்திங், ஏப்.12-
பந்திங் சட்டமன்ற மக்கள் மையத்தின் அதிகாரிகள் வாக்காளர்களை அழைத்து அவர்கள் எதிர் நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளை அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் கேட்டறிந்து அவற்றை தமது கவனத்திற்குக் கொண்டு வரப்படுவதன் வாயிலாக மக்கள் நலப் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காணப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தெரிவித்தார்.
தொகுதி வாக்காளர்கள் மத்தியில் நிலவி வரும் வீட்டுப் பிரச்சினை, மாணவர்கள் கல்வி உதவி நிதி, உடல் நலம் குறைந்த மனிதர்களுக்கான உதவிநிதி மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு பந்திங் சட்ட மன்ற மக்கள் மையத்தின் மூலம் தேவைப்படும் உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
நேற்று முன்தினம் மாலையில் ஜெஞ்ஜாரோம் பாலாய் ராயா மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடனான நேரடிச் சந்திப்பில் கலந்து கொண்ட பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு தமது உரையில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
மாநில அரசு செயலகத்தின் வாயிலாக பி 40 பிரிவின் கீழ் ஏழ்மையில் இருக்கும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மனிதர்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகள் முறையாக அறியப்பட்டு அதற்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வசதி குறைந்த குடும்ப உறுப்பினர்களுக்கு பாப்பா ராய்டு உதவித்தொகை எடுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகத்தினருடன் பாப்பா ராய்டுவைச் சந்தித்த தொண்டர் மாமணி எஸ்.எம்.ராமன். வரும் 4.5.2025(ஞாயிறு)அன்று காலையில் தெலுக் பங்லீமா காராங் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற விருக்கும் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி வெளியிடப்பட்ட அழைப்பிதழை வழங்கி அவரது வருகையை உறுதிப்படுத்திக் கொண்டார். நடக்கவிருக்கும் ஆலய கும்பாபிஷேகத்தில் தாம் கலந்து கொள்ள இருப்பதாக பாப்பா ராய்டு ஒப்புதல் அளித்தார்.
Wakil rakyat Papparaidu Veraman memaklumkan bahawa pelbagai isu rakyat di kawasan DUN Pangkalan diatasi secara berperingkat melalui Pusat Khidmat Rakyat. Bantuan perumahan, pendidikan dan kebajikan disalurkan, termasuk sumbangan tunai kepada keluarga B40.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *