இந்தியர்களை வலுப்படுத்துங்கள்! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அன்வார் வலியுறுத்து!
- Thina S
- 29 Oct, 2024
அக்தோபர் 29,
இன்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் அன்வார் சிறப்புச் சந்திப்பை நடத்தியுள்ளார்.
மித்ரா குறித்தான முக்கிய நகர்வுகளையும் இந்தியர்களின் வணிகப் பொருளாதாரம் குறித்தும் சில முக்கிய விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் தமது முகநூலில் பகிர்ந்தார்.
பிரதமர் அன்வாரின் முகநூல் பதிவில் :>
நாட்டின் இந்திய சமூகத்தினரின் மேம்பாடு தொடர்பாக, மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (MITRA)வுடனும், இந்திய சமூகத்தை பிரதிநிதிக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடனும் சந்திப்புக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
குறிப்பாக MITRA வழியாக, இந்நாட்டில் இந்திய சமூகத்தைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து வலுப்படுத்த அரசாங்கம் உறுதிப்பூண்டுள்ளதை இச்சந்திப்பின்வழி நான் வலியுறுத்தியுள்ளேன்.
இந்திய சமூகத்தின் வணிக நிதியுதவி உட்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் நோக்கில், 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நான் அறிவித்த நிதி ஒதுக்கீடும் இதில் அடங்கும்.
எனவே, இந்த நிதி ஒதுக்கீடு இலக்குகளை அடையும் வகையில், துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில், உருமாற்றத் திட்டங்களை ஒருங்கிணைத்து, செயல்பாடுகளை அதிகரிக்குமாறு தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சுக்கு (KUSKOP) உத்தரவிட்டுள்ளேன்.
இதன்வழி, அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுடன், குறிப்பாக இந்திய சமூகத் தலைவர்களின் ஆதரவுடன் MITRA-வை மேலும் வலுப்படுத்துவதன்வழி இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கான தூரநோக்கு வரைவுகள் அனைத்தும் சிறப்பாக ஈடேறும் என பெரிதும் நம்புகிறேன்.
Mengadakan pertemuan bersama pengurusan Unit Transformasi Masyarakat India Malaysia (MITRA) dan beberapa Ahli Parlimen yang mewakili masyarakat India bagi membincangkan pandangan dan idea untuk terus memperkasa komuniti India.
Saya tegaskan pendirian Kerajaan untuk terus memperhebatkan inisiatif bagi memberdayakan komuniti India di negara ini, khususnya menerusi MITRA.
Ini termasuklah menerusi peruntukan yang telah saya umumkan dalam Belanjawan 2025 untuk melaksanakan pelbagai program, termasuk pembiayaan perniagaan komuniti India.
Justeru, saya mengarahkan Kementerian Pembangunan Usahawan dan Koperasi (KUSKOP) untuk menyelaras dan memperbanyakkan program berkaitan bagi memastikan peruntukan ini mencapai matlamat, yang akan diselia Timbalan Menteri, Dato’ Sri Ramanan Ramakrishnan.
Semoga iltizam Kerajaan serta sokongan semua pihak khususnya daripada pimpinan masyarakat India, akan terus memperkukuh MITRA dan merealisasikan hasrat untuk memartabatkan masyarakat India di negara ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *