ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை ஈர்த்த Rapid Rail

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா: கடந்த மே 29 ஆம் தேதி ஒரே நாளில் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள LRT, MRT மற்றும் மோனோரயில் பாதைகளின் நெட்வொர்க்கில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை ரேபிட் ரெயில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுவரை பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இது என்று Rapid Rail Sdn Bhd இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அன்றைய தினம் கெலனா ஜெயா தடம் 2 லட்சத்து 87 ஆயிரத்து 102 பயணிகளை பதிவு செய்தது, அதே நேரத்தில் அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் தடம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 184 பயனீட்டாளர்களைப் பதிவு செய்தது.

மோனோ ரயில் 61 ஆயிரத்து 236 பயனர்களையும், காஜாங் MRT தடம் 2 லட்சத்து 74 ஆயிரத்து 302 மற்றும் புத்ராஜெயா MRT தடம் 1 லட்சத்து 57 ஆயிரத்து 767 பயனர்களையும் பதிவு செய்துள்ளது.

ரேபிட் ரேபிட், கேலானா ஜெயா தடம் மற்றும் கஜாங் தடம் ஆகியவற்றில் ரயில் கொள்ளளவு அதிகரிப்பு மற்றும் ரயில் பாதையில் பல புதிய கவர்ச்சிகரமான இடங்களைத் திறப்பது உள்ளிட்ட பல முயற்சிகளால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாகக் கூறியது.

ரயில் நிலையங்களைச் சுற்றி நடத்தப்பட்ட பல பெரிய அளவிலான நிகழ்வுகள் மற்றும் பள்ளி விடுமுறை காலம் ஆகியவை பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு பங்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *