பெற்றோர்களின் விழிப்புணர்வு மை கார்டு விண்ணப்ப உயர்வுக்குப் பெரும் பங்களித்துள்ளது!
- Muthu Kumar
- 11 Oct, 2024
மலாக்கா, அக்.11-
12 வயதில் மை கார்டுக்கான பதிவு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற பெற்றோர்களின் விழிப்புணர்வு மை கார்டு விண்ணப்ப உயர்வுக்குப் பெரும் பங்களித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இவ்வாண்டு ஜனவரி தொடங்கி செப்டம்பர் மாதம் முழுவதும் 366,526 முதன்முறை மை கார்டு விண்ணப்பங்கள் செய்யப்பட்டன. கடந்தாண்டின் இதே கால கட்டத்தில் 349,520 விண்ணப்பங்கள் செய்யப்பட்டதாக தேசியப் பதிவிலாகாவின் நிர்வாகப் பிரிவுக்கான துணைத் தலைமை இயக்குநர் ஃபைஸால் ஜாருடின் தெரிவித்தார்.
மலாக்கா மாநிலத்தில் மட்டும் இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை 11,371 மை கார்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட வேளையில், கடந்தாண்டின் இதே கால கட்டத்தில் 10,675 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டன.
இதற்கு முன்பு 12 வயதுடைய சிறார்களுக்கு மை கார்டைப் பதிவதில் தாமதம் ஏற்பட்டதில் இது உண்மையில் தற்போது பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு அதிகரித்திருப்பதைத்தான் காட்டுகிறது. ஆயர் கெரோவிலுள்ள மலாக்கா மாநில உள்துறை அமைச்சின் வளாகத்தில் மாநில ரீதியிலான தேசியப் பதிவிலாகாவின் 76ஆவது தினக் கொண்டாட்டத்தில் நடைபெற்ற போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது ஃபைஸால் ஜாருடின் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *