மாதம் RM 200 பெறலாம்! புடி மதானி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யுங்கள்! - நிதி அமைச்சு அறிவிப்பு
- Shan Siva
- 20 Jun, 2024
கோலாலம்பூர், ஜூன் 20: டீசல் மானிய சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்திர திட்டமான RM200 புடி மதானி பண உதவிக்கான 1 லட்சம் விண்ணப்பங்களுக்கு நிதி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
தனிப்பட்ட டீசல் வாகன உரிமையாளர்கள் (Budi Individu), விவசாயிகள் மற்றும் சிறு தோட்டக்காரர்கள் (Budi Agri-Komoditi) ஆகியோர் விண்ணப்பத்தில் உள்ளதாக இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
ஜூன் 10 ஆம் தேதி வரை 30,000 விண்ணப்பதாரர்கள் தங்கள் பணத்தைப் பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து ஜூன் 19 ஆம் தேதி மேலும் 46,000 பேர் பணம் பெற்றுள்ளனர்.
ஜூன் மாதத்திற்கு முன் விண்ணப்பித்தவர்கள் ஜூலை மாத தொடக்கத்தில் பணம் பெறுவார்கள்.
தகுதியுள்ள பெறுநர்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் மாதந்தோறும் RM200 உதவியைப் பெறுவார்கள் அல்லது அவர்கள் சிம்பனன் நேஷனல் வங்கியில் இருந்து பணத்தைப் பெறலாம்.
டீசல் மானியம் சீரமைப்பு என்பது தகுதியான குழுக்கள் மற்றும் தேவைப்படும் சமூகங்களுக்கு இலக்கு உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
RM200 மாதாந்திர பண உதவியானது தகுதியுள்ள டீசல் வாகன உரிமையாளர்களுக்கான கூடுதல் செலவினங்களில் 80% க்கும் அதிகமான தொகையை உள்ளடக்கியது.
பண உதவிக்கு விரைவில் பதிவு செய்ய தகுதியுள்ள மலேசியர்களைத் தாம் அழைப்பதாக அவர் கேட்டுக்கொண்டார்.
விண்ணப்பம் செய்யப்பட்ட மாதத்தில் பணம் செலுத்துவதைத் தொடங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று அமீர் ஹம்சா கூறினார்.
மே 28 அன்று தொடங்கிய புடி மதனி முயற்சியானது, தகுதியான தனியாருக்குச் சொந்தமான டீசல் வாகன உரிமையாளர்களுக்கு பண உதவியை விநியோகிப்பதற்கான ஒரு தளமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களின் நிலையை https://budimadani.gov.my இல் பார்க்கலாம்.
யாருடைய விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படவில்லையோ, அவர்கள் தளத்தில் தானே மேல்முறையீடு செய்யலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *