NGO RM26 மில்லியன் மோசடி- சந்தேகத்தில் ஐந்து நபர்களை கைது செய்தது MACC

- Muthu Kumar
- 17 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 16:
அரசு சாரா அமைப்பிலிருந்து (NGO) பொது நன்கொடையாக RM26 மில்லியன் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்களை மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமன MACC கைது செய்துள்ளது.சம்பந்தப்பட்ட அந்த ஐந்து சந்தேக நபர்களில் NGOவின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிதி அதிகாரி ஆகியோர் அடங்குவர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த வியாழக்கிழமை முதல் சிலாங்கூர், மலாக்கா மற்றும் பினாங்கில் உள்ள பல இடங்களில் சிலாங்கூர் MACC நடத்திய "Ops Serantau" நடவடிக்கையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.சந்தேக நபர்கள் ஏழு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பணம் அவர்களின் தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றப்பட்டு நகைகள், கார்கள், நிலம், வீடுகள் மற்றும் கிரிப்டோகரன்சி வாங்க பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.நிறுவன நிதியை தனிப்பட்ட கணக்குகளுக்கு திருப்பி ஊழியர்களுக்கு கடன்களை வழங்கியதாகவும், சிரியாவில் மனிதாபிமான கிணறு கட்டும் திட்டத்திலிருந்து உபரி நிதியை தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தியதாகவும் நம்பப்படுகிறது என்று ஒரு வட்டாரம் பெர்னாமாவிடம் தெரிவித்தது.
பொது நன்கொடைகளை தவறாகப் பயன்படுத்துவது 2015 முதல் நடந்து வருவதாக நம்பப்படுகிறது என்று வட்டாரம் மேலும் கூறியது.பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் தோராயமாக RM100,000 மதிப்புள்ள நகைகள், RM10 லட்சத்துக்கு அதிகமான ரொக்கம், சுமார் RM650,000 மதிப்புள்ள கிரிப்டோகரன்சி கணக்குகள் மற்றும் RM14 லட்சத்துக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்ட நான்கு வீடுகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணைக்காக கிட்டத்தட்ட RM50 லட்சம் மதிப்புள்ள 14 வங்கிக் கணக்குகளை MACC முடக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lima individu dari sebuah NGO ditahan SPRM kerana disyaki menyeleweng RM26 juta dana awam. Wang digunakan untuk membeli barang kemas, hartanah, kereta dan kriptowang. 14 akaun bank dibekukan dan barangan mewah dirampas dalam siasatan kes sejak 2015.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *