செழிப்புக்கான பாதையாக டிவெட் !

- Muthu Kumar
- 07 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 7-
மலேசியா தனது பொருளாதாரப் பயணத்தில் ஒரு முக்கிய கட்டத்தில் நிற்கிறது. உயர் வருமானம், அறிவு சார்ந்த பொருளாதாரமாக மாற நாடு விரும்புவதால், நான்காவது தொழிற்புரட்சியை வழிநடத்தும் திறன் கொண்ட திறமையான பணியாளர்களை உருவாக்குவதற்கான அவசரமும் அவசியமும் முன்பைவிட இப்போது அதிகமாக உள்ளது என்று சட்டத்துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் கூறினார்.
டிவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) இந்த மாற்றத்தின் முக்கிய அம்சமாக வெளிப்படுகிறது. தொழில்துறை தேவைகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கல்வியை சீரமைப்பதன் மூலம், மலேசியா பொருளாதார வளர்ச்சியைக் காண இயலும், மேலும், வெளிநாட்டு தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதோடு நம் இளைஞர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கி பாதுகாக்கவும் முடியும்.
ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கித் தன்மை, செயற்கை நுண்ணறிவு ( மற்றும் பசுமைத் தொழில்நுட்பங்கள் சார்ந்த தொழில்களை மறுவடிவமைப்பதன் மூலம் உலகப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 2025க்குள். 50விழுக்காடு மலேசிய வேலைகளுக்கு தொழில்நுட்ப திறன்கள் தேவைப்படும், ஆனால் தற்போதைய பணியாளர்களில் 22விழுக்காடு மட்டுமே இந்தத் துறைகளில் பயிற்சி பெற்றுள்ளனர்.
டிவெட் நிறுவனங்கள், நவீனமயமாக்கப்பட்டால், மலேசியாவின் போட்டித்தன்மையை நிலைநிறுத்துவதற்கான முக்கியமான திறன்களான ரோபோட்டிக்ஸ், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் டிஜிட்டல் உற்பத்தியில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளை உருவாக்குவதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைக்க முடியும்.
இளைஞர்களின் வேலையின்மை 10.7 விகிதம் இருந்தபோதிலும், தொழில்நுட்பக் காலியிட வேலைகளை நிரப்புவதில் சிக்கல்கள் இருப்பதாக முதலாளிகள் தெரிவிக்கின்றனர். இளம் மலேசியர்களை வேலைக்குத் தயாரான திறன்கள் கொண்டாவர்களாக உருவாக்குவதன் மூலம் டிவெட்யை ஒரு தீர்வை வழங்குகிறது.
உதாரணமாக, ஜெர்மனியின் இரட்டைக் கல்வி முறையானது, வகுப்பறைக் கற்றலையும் தொழிற்பயிற்சிகளையும் இணைத்து, இளைஞர்களின் வேலையின்மையை 6 விழுக்காட்டுக்கும் குறைவாகவே வைத்துள்ளது. மலேசியா தனது அடுத்த தலைமுறையை உழைப்பு மிகுந்த தொழில்களில் இருந்து விண்வெளி மற்றும் மின்சார வாகன உற்பத்தி போன்ற உயர் தொழில்நுட்ப துறைகளுக்கு மாற்றுவதற்குத் திறமையான பணியாளர்கள் தேவை. டிவெட் இந்த மாற்றத்தைக் கொண்டுவர முடியும். என்பதோடு வெளிநாட்டு முதலீட்டையும் ஈர்க்க முடியும்.
சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (TE), அதன் தொழில் கூட்டாண்மைகளுக்குப் புகழ்பெற்றது. அந்த நாட்டின் GDP வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அது வழங்கியுள்ளது. எனவே, மலேசியாவும் அதனைப் பின்பற்றுவது அவசியமாகும். மலேசியாவின் பொருளாதார மறுமலர்ச்சியின் அடிக்கல்லாக டிவெட்யை வெற்றிபெறச் செய்வோம். அங்கு ஒவ்வொரு பட்டதாரியும் வேலைக்குத் தயாராவதோடு எதிர்காலத்திற்குத் தயாராக உள்ளதை உறுதிசெய்வோம் என்று மு. குலசேகரன் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *