எரிவாயுக் குழாய் தீ விபத்து- பெரியளவிலான துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படும்!

top-news
FREE WEBSITE AD

சுபாங் ஜெயா, ஏப்.12-

அண்மையில் நிகழ்ந்த எரிவாயுக் குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடமைப்புப் பகுதியில் விரிவான முறையில் துப்புரவு பணிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும்.இத்திட்டம் அனைத்து நிறுவனங்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், தொண்டூழியர்களை உட்படுத்தியதாகும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

இப்பகுதிக்கான அணுகல் வரம்புக்குட்பட்டிருப்பதால் இதில் ஈடுபட விரும்பும் அரசு சார்பற்ற இயக்கங்கள், தொண்டூழியர்கள் தேசிய விளையாட்டு மன்றத்தின் கீழுள்ள சிலாங்கூர் தொண்டூழிய தரப்புடன் பதிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

நாங்கள் சுழிய அடையாளமிட்டுள்ள பகுதிக்குள் யாரும் நுழைய அனுமதிக்கப்பட மாட்டோம். இதில் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது டத்தோ ஹுசேன் ஒமார் கான் குறிப்பிட்டார்.

Tumpuan pembersihan besar-besaran dijalankan hujung minggu ini di Subang Jaya susulan insiden kebakaran paip gas. Hanya pasukan berdaftar dibenarkan masuk kawasan terjejas yang dikenal pasti selamat oleh pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *