நள்ளிரவுக்குள் கோலா லங்காட் பகுதியில் தண்ணீர் விநியோகம்!

top-news
FREE WEBSITE AD

கோலா லங்காட்டில் நேற்றிரவு ஏற்பட்ட சில  இடையூறுகளால் பாதிக்கப்பட்ட 41 பகுதிகளில் நீர் விநியோகம் இன்று  நள்ளிரவிற்குள் முழுமையாக சரி செய்யப்படும்  என்று ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

 ஓலக் லெம்பிட் பிரதான துணை மின்நிலையத்தில் அவசர மின் பழுது ஏற்பட்டதன்  காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து லபோஹன் டாகாங் நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று மீண்டும் செயல்படத் தொடங்கியதாக  ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.
 
குடியிருப்புகளுக்கு படிப்படியாக தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது எனவும்,   மதியம் 12 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகத்தின் மீட்பு நிலை 31.7% ஐ எட்டியுள்ளது என்றும் ஆயர் சிலாங்கூர் தனது  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறுதி ஊர்வலங்கள் போன்ற முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் டேங்கர்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று  ஆயர் சிலாங்கூர் கூறியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *