மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க பாத்தேக் ஏர் வியூகப் பங்காளித்துவ ஒப்பந்தம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 21-

மலேசியாவில் மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க பாத்தேக் ஏர் மலேசிய சுகாதார பாதுகாப்பு பயண மன்றத்துடன் வியூக பங்காளித்துவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.

இந்த பங்காளித்துவ ஒப்பந்தத்தில் 13 பிப்ரவரி 2025 பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி மற்றும் மலேசிய சுகாதார பாதுகாப்பு பயண மன்றத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமட் அலி அபு பாக்கார் கையெழுத்திட்டனர்.

சுகாதார பாதுகாப்பு சுற்றுலாவிற்கு மலேசியாவை ஓர் அனைத்துலக மையமாக உருவாக்க இந்த ஒப்பந்தம் துணை புரியும். மலேசியாவில் மருத்துவ மற்றும் உடல் நல சிகிச்சைகளுக்கு அனைத்துலக பயணிகளை பாத்தேக் ஏர் தடையின்றி கொண்டுவர இந்த ஒப்பந்தம் ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதர நாடுகளிலிந்து மருத்துவ பயணிகளை இங்கு கொண்டுவர பாத்தேக் ஏர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

இதனிடையே மலேசியாவை அனைத்துலக சுகாதார பாதுகாப்பு மையமாக உருவாக்க வியூக பங்காளித்துவ ஒப்பந்தம் துணை புரியும் என பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.அனைத்துலக நோயாளிகள் தங்கு தடையின்றி பயணிக்க பாத்தேக் ஏர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார் அவர்.

கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் பகுதி ஆண்டில் 584,468 மருத்துவ பயணிகள் மலேசியாவிற்கு வருகை புரிந்ததாக அவர் சுட்டிக் காட்டினார். இந்த மருத்துவ பயணிகளில் பெரும்பாலும் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் என அவர் கூறினார்.இந்தோனேசியாவில் ஜாக்கார்த்தா,சுராபாயா, மேடான்,பாலி,பாத்தாம், லொம்போக்,பாடாங் போன்ற நகரங்களுக்கான தனது விமான சேவைகளின் மூலம் அதிகமான இந்தோனேசியர்கள் மருத்துவ சுற்றுலாவிற்காக மலேசியா வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் 2026 மலேசியா வருகை புரியும் ஆண்டை தொடர்ந்து இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் என நாம் நம்புவதாக அவர் கூறினார். மருத்துவ சிகிச்சைக்காக மலேசியாவிற்கு அனைத்துலக நோயாளிகளை கொண்டுவர இன்னும் அதிகமான நகரங்களுக்கு தனது விமான சேவையை மேற்கொள்ள பாத்தேக் ஏர் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *