அடுத்த தலைமுறை பத்திரிகையாளர்களுக்கு பிரகாசமான எதிர்காலம்! - தொடர்புத்துறை அமைச்சர் நம்பிக்கை

top-news
FREE WEBSITE AD


பத்திரிகை உலகத்தை ஆராய ஆர்வமுள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இன்று சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டார்.

மலேசியா சரவாக் பல்கலைக்கழகம், ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சரவாக் மற்றும் SEGI கல்லூரி சரவாக் ஆகியவற்றில் இருந்து 250 மாணவர்கள் கலந்து கொண்ட ஹவானா 2024  எனும் நிகழ்ச்சியில் ஃபஹ்மி ஃபட்சில் கலந்துகொண்டார். இந்த ஆண்டு தேசிய பத்திரிகையாளர்கள் தின (ஹவானா) கொண்டாட்டத்திற்காக நடைபெற்ற நிகழ்வுகளின் ஒரு பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உரையாடல் அமர்வில் ஊடக சுதந்திரம், போலிச் செய்திகளின் பரவல் மற்றும் ஊடகத்துறை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. மாணவர்கள் அது சார்ந்த கேள்விகளை முன்வைத்தனர்.

மாணவர்கள் கேட்கும் கேள்விகளின் தரம் இதுதான் என்றால், மலேசியாவிற்கு அடுத்த தலைமுறை பத்திரிகையாளர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக தாம் நம்புவதாக  ஃபஹ்மி கூறினார்.

உரையாடல் அமர்வின் போது, ​​மலேசியாவில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு முடியாட்சியின் தனித்துவமான கருத்தை கொண்டாடும் வகையில், ஜூலை 20 அன்று மலேசியாவின் 17வது மன்னரின் முடிசூட்டு விழாவுடன் இணைந்து உள்ளூர் உயர்கல்வி நிறுவனங்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் என்று ஃபஹ்மி நம்பிக்கை தெரிவித்தார்.

மன்னரின் முடிசூட்டு விழா நிகழ்வுகளுக்கான சிறப்புக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் தாம் மிகவும் பெருமைப்படுவதாகவும், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இது ஓர் அரிய வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.

உயர்கல்வி நிறுவனங்களுக்கு, முழுமையான முடியாட்சியைப் பின்பற்றும் புருனே போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது வேறுபாடுகள் மற்றும் தனித்துவத்தை எடுத்துக்காட்டும் சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது நல்லது என்று அவர் கூறினார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *