லோட்டஸ் முதியோர் இல்லம் அருகில் சட்டவிரோத குப்பைமேடு நடவடிக்கை தேவை!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

தெலுக் இந்தான், ஜூன் 18-

இங்குள்ள ஜாலான் ராஜா மூடா மூசாவில் அமைந்துள்ள லோட்டஸ் என்னும் தனியார் முதியோர் இல்லம் அரசாங்க அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் சுமார் 20 முதியோர்கள் வசிக்கின்றனர். இந்த முதியோர் இல்லம் அருகில் ஜாலான் சுல்தான் அப்துல் அஜிஸ் சாலை யோரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சட்டவிரோதமாக குப்பைகள் போடுகின்றனர் என்று தெலுக் இந்தான் வட்டார பொதுமக்கள் கூறியுள்ளனர்.




இது போன்று சட்டவிரோதமாக குப்பை கொட்டுவது கவலைக்குரியது. துர்நாற்றத்தினால் முதியோர்களின் சுகாதாரத்திற்கும், சுற்றுப்புறத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது. இப்பிரச்சினை குறித்த தெலுக் இந்தான் ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சபா செயலாளரும், தொண்டூழியருமான சிவா தெரிவித்தார்.

இந்தச் சட்டவிரோத குப்பை கொட்டுவது முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களின் சுகாதாரத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மேலும், குப்பையிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் மற்றும் பூச்சிகள் மூலம் நோய்கள் பரவாது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது என்றார்.

இந்தச் சட்டவிரோத குப்பை கொட்டுவதை தடுக்க, முதியோர் இல்லம் நடத்துநர். அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் இணைந்து பிரச்சினையைத் தீர்க்க முன்வரவேண்டும்.
தவிர, குப்பை கொட்டுபவர்களை சிசிடிவி மூலம் யார் என்று அடையாளம் கண்டறியப்பட்டு அவர்கள் மீது ஊராட்சி மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன் மூலம் சட்டவிரோத செயல்களைத் தடுப்பதற்கும், முதியோர்கள் நலனைப் பாதுகாப்பதற்கும் இந்த நடவடிக்கை அவசியமாகிறது என்றும் சிவா பகிர்ந்துள்ளார்.

Teluk Intan penduduk bimbang pembuangan sampah haram berhampiran rumah warga emas di Jalan Raja Muda Musa. Tindakan ini menjejaskan kesihatan dan kebersihan. Pihak berkuasa disaran bertindak segera serta memasang CCTV untuk kesan dan dakwa pesalah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *