மனநலன் பாதிக்கப்பட்டவர்களைச் செம்பனை தோட்டத்தில் வைத்து கொடுமை! தட்டிக் கேட்டதும் வாசலில் கைவிட்ட அரசியல்வாதி! – டேவிட் மார்ஷல் கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 6,

கெடாவில் பாடாங் செராய் பகுதியில் இயங்கி வந்த தனியார் பராமரிப்பு இல்லத்தின் பொறுப்பாளர் செம்பனை தோட்டத்தில் 21 முதியோர்களைச் சங்கிலிகளால் கட்டப்பட்டு சுகாதாரமற்ற நிலையில் வைத்திருந்ததைத் தட்டிக் கேட்ட உரிமை கட்சியின் பொறுப்பாளரும் மலேசியத் தமிழர் குரலின் பொறுப்பாளருமான டேவிட் மார்ஷல் அவர்களின் அலுவலகத்திந் முன் சம்மந்தப்பட்ட பொறுப்பாளர் 21 முதியவர்களையும் கைவிட்டு சென்றுள்ளார்.

நிலமையை அறிந்த டேவிட் மார்ஷல் உடனடியாகச் சமூக நலத்துறையான JABATAN KEBAJIKAN அதிகாரிகளிடமும், பினாங்கு மாநிலச் சமூக நல மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் Lim Siew Khim, பினாங்கு மாநில சுகாதாரத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் Daniel Gooi ஆகியோருக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் உடனடியாகச் சமூக நலத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட 21 பேரையும் உடல் நலச் சோதனையை நடத்தினர்.

21 பேரும் மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களைக் கைதி போல நடத்தாதீர்கள் என தெரிவித்ததற்குச் சம்மந்தப்பட்ட காப்பகத்தின் பொறுப்பாளரான பிரேம் என்பவர் இவ்வாறு அலுவலகத்தின் வாசலில் அவர்களைக் கைவிட்டுச் சென்றிருப்பது கொடுமையானதும் மனிதாபிமானமற்றதும் என கடிந்தார். முன்னதாகச் செம்பனை தோட்டத்தில் மனிதாபிமானமற்ற முறையில் சங்கிலியால் கட்டி வைத்திருந்ததை அறிந்ததும் சம்மந்தப்பட்ட இடத்திலிருந்து பிரேம் என்பவருடன் தொடர்பு கொண்டு பேசிய போது நல்லபடியாகப் பேசி, விரைந்து நல்ல இடத்திற்கு அவர்களை மாற்றுவதாக நம்பிக்கை அளித்த நிலையில் திடீரென இன்று 11 மணியளவில் தமது அலுவலகத்தின் வாசலில் 21 முதியவர்களையும் மனநலன் பாதிக்கப்பட்டவர்களையும் கைவிட்டு விட்டு சென்றிருப்பதாகவும் பிரேம் என்பவர் பி.கே.ஆர் கட்சியின் தொகுதி உறுப்பினர் என்பதையும் டேவிட் மார்ஷல் அடையாளப்படுத்தினார்.

கடந்த ஏப்ரல் மாதம் மனநலக் காப்பகத்தில் பெண் ஊழியர் ஒருவர் முதியவரைத் தாக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட காப்பகத்தின் மீது நடவடிக்கை எடுத்த சமூக நலத்துறையினர் காப்பகத்தில் இருந்த மனநலன் பாதிக்கப்பட்டவர்களைக் கைவிட்டதால் காப்பகத்தின் பொறுப்பாளரன பிரேம் என்பவர் 21 முதியவர்களையும் செம்பனை தோட்டத்தில் உள்ள பலகை கூடாரத்தில் சங்கிலியால் கட்டி வைத்து, சுகாதாரமற்ற நிலையில் வைத்துள்ளார். தற்போது அவர்களின் நிலைக்கு மாநிலச் சமூக நலத்துறையும் ஒரு காரணம் என்பதால் அவர்களுக்கு முறையானச் சிகிச்சை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்குப் பொறுப்பேற்கும்படி டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *