சட்டவிரோதமாக மலேசிய எல்லையைக் கடந்த இருவர் கைது!

top-news

ஜூன் 19,


எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவின் PGA அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக மலேசிய எல்லையைக் கடக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் உள்ளூர் ஆடவர் என்றும் மற்றொருவர் பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காலை 8 மணிக்கு எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவின் PGA அதிகாரிகள் ரோந்து பணியிலிருந்த போது அவர்கள் RANTAU PANJANG வழியாக மலேசியாவுக்குள் நுழைய முயன்றதாகத் தெரிய வந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட இருவரிடமும் மலேசிய எல்லையைக் கடப்பதற்கான முறையான எந்தவோர் ஆவணங்களும் இல்லை என தெரிய வந்துள்ளது, கைது செய்யப்பட்ட மலேசிய ஆடவர் வெளிநாட்டினர்களைச் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாக்கிஸ்தான ஆடவர் கிளாந்தான் மாநிலக் குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவின் PGA செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


Dua lelaki termasuk seorang warga tempatan dan seorang warga Pakistan ditahan ketika cuba memasuki Malaysia secara haram melalui Rantau Panjang. Mereka tidak memiliki dokumen sah dan disyaki terlibat dalam aktiviti penyeludupan migran rentas sempadan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *