கனத்த மழையைத் தொடர்ந்து ஷா ஆலம், கிள்ளான், பெட்டாலிங்கில் கடும் வெள்ளம்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

ஷாஆலம், ஏப்.12-

நேற்று அதிகாலை பல மணி நேரம் நீடித்த கனத்த மழையைத் தொடர்ந்து ஷா ஆலம் கம்போங் ஜாவா கிள்ளான் செத்தியா அலாம், கம்போங் தெங்ஙா, தாமான் ஸ்ரீ ஜெயா, கம்போங் ஸ்ரீ அமான் மற்றும் பெட்டாலிங் வட்டாரத்தில் 2 அடி உயரம் வரை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை நேரத்தில் கடுமையாகப் பெய்து கொண்டிருந்த மழையால் முக்கிய அலுவல் காரணமாக தலைநகர் நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த தாம் அதனால் பெரும் சிரமத்தை எதிர் நோக்கியதாக பயணி ஒருவர் தெரிவித்தார். அதே வேளையில் கூட்டரசு நெடுஞ்சாலை நெடுகிலும் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றதோடு,சில வாகனங்கள் இயந்திரக் கோளாறுகள் காரணமாக சாலையோரம் நிறுத்தப்பட்ட நிலையில் தாம் அதைக் கடந்து சென்றதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

மெட் மலேசியா வானிலை மையம் அறிவித்துள்ளது போன்று நாட்டின் பருவநிலை மாற்றத்தால் இவ்வட்டாரத்தில் நேற்று காலை நேரத்தில் கனத்த மழை பெய்யும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று வாகன ஓட்டி தயாளன் கூறினார். இதனிடையே பந்திங் வட்டாரத்திலும் நேற்று பின்னிரவு 3 மணி தொடக்கம் பல இடங்களில் கனத்த மழை விட்டு விட்டு பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Kawasan Shah Alam, termasuk Klang, Setia Alam, dan Petaling, dilanda banjir setinggi 2 kaki selepas hujan lebat yang berterusan selama beberapa jam pada awal pagi semalam. Keadaan ini menyebabkan kesesakan lalu lintas yang teruk dan beberapa kenderaan terhenti di tepi jalan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *